வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தை Jeffersonville, Indiana, USA 62-1223 1நான் சகோ. நெவிலிடம், “சிறிது அபிஷேகம் கூட இன்று காலை உங்கள் மேல் இல்லையென்று நிச்சயமாக அறிந்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். வியாதியஸ்தர்களுக்கு ஜெபிப்பதற்காக நான் வந்தேன். ஞாயிறு விடியற்காலையிலேயே சிலர் கூடத் தொடங்கினர். நான் கிரகித்துக் கொண்டது என்னவெனில், அவர்களை இங்கு சபைக்கு வரச் சொல்ல வேண்டும் என்பதே. வியாதியஸ்தர்களுக்கு சபையில் ஜெபிப்பது நல்லது என்பது நான் எப்பொழுதும் கொண்டுள்ள கருத்து. ஏனென்று தெரியவில்லை. எனக்கு சபையென்றால் பிடிக்கும். சபையோரும் ஜனங்களும் ஜெபித்துக் கொண்டிருக்கும் இந்த இடத்திற்கு வருவது எனக்குப் பிரியம். ஒரு சிறுமி இருந்தாள் - மிகவும் அழகானவள். அவள் இப்பொழுது இங்கு எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன் - அவளுடைய ஜனங்கள் ஏற்கனவே வீட்டுக்குப் போகவில்லையென்றால். அவள் மிகவும் அழகுள்ளவள், அவள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறாள். நாங்கள் அந்நியபாஷை பேசுதலையும் அர்த்தம் உரைக்கப்படுதலையும் கேட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு சிறுமியைக் குறித்து ஏதோ கூறப்படுகிறதென்று, நாங்கள் புரிந்து கொண்டோம். அங்கு என்ன சொல்ல வேண்டுமென்று கர்த்தர் ஒரு செய்தியை அளிப்பாரா என்று காண நாங்கள் காத்திருந்தோம். ஆனால் அந்த சிறுமி இப்பொழுது நன்றாயிருக்கிறாள் என்றும் அவள் குணமாகிவிடுவாள் என்றும் நினைக்கிறேன். 2பார்வை இழந்த ஒரு ஸ்திரீயும் இருந்தாள். அவளுக்காக நாங்கள் ஜெபித்தோம். நோயாளி வாகனத்தில் ஒரு மனிதன் இருந்தார். அவர் ஒரு போதகர். அவருடைய எடை முப்பத்தைந்து நாற்பது பவுண்டு கூட இருக்காது. அவர் மிக மிக... எனவே இவர்களுக்காக நான் ஜெபிக்க வந்தேன். நான் அதிகமாக தயங்கின காரணம் என்னவெனில், என் ஓட்டைப் பல்லை நிரப்பின பொருள் (filling) விழுந்துவிட்டது. எனவே இன்று காலையிலிருந்து அந்த ஓட்டைப் பல்லின் வழியாக காற்று வெளியே சென்று, நான் விசில் அடித்துக் கொண்டிருக்கிறேன். அதை சாணை பிடித்து விட்டு அதன் மேல் மூடிகளைப் போட வேண்டுமென்று அவர்கள் கூறுகின்றனர். எனவே எனக்கு வயதாகின்றது - அது ஒன்று தான் எனக்குத் தெரியும். அது பாதி நிறைக்கப்பட்டிருந்தது. நான் பேசும்போது காற்று அதன் வழியாக வெளியே தள்ளி வருகின்றது. அதை என்னால் உணர முடிகின்றது. நான் என்ன சொல்லுகிறேன் என்று உங்களுக்குப் புரியும். நான் பேசுவது மழலைச் சொற்கள் போன்றுள்ளது. 3இன்று காலை உயிரோடிருந்து சபைக்கு வர முடிந்ததனால் நாம் உண்மையில் சிலாக்கியமுள்ள ஜனங்களே. கிறிஸ்துமஸ் பண்டிகையின் முந்தின மாலையாகிய இன்று அவர்கள் கொண்டாட்டத்துக்காக காத்திருக்கின்றனர். நான் நம்புகிறேன்... இன்று காலை நிறைய பிள்ளைகள் இங்குள்ளனர். எனவே நான் அமைதியாயிருப்பது நலம். வயது வந்தவர்களாகிய நாம் சில சமயங்களில் பேசுவதை இந்த பிள்ளைகள் கேட்கவே கூடாது. அது உங்களுக்குத் தெரியும். சிறிது கழிந்து பிள்ளைகளுக்கு கொடுக்க சபை சிறு வெகுமதிகளை வைத்துள்ளது. அவைகளை நான் பார்வையிட்டேன். ஞாயிறு பள்ளிக்குப் பிறகு சிறிது நேரம் தங்கியிருங்கள். சிறுவர்களுக்கு இன்று காலை கொடுப்பதற்கென அவர்கள் சில வெகுமதிகளை வைத்திருக்கினறனர் என்று நினைக்கிறேன். சிறுவர்களே ஞாபகம் கொள்ளுங்கள், இதை நாம் செய்யும்போது - (இதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்), அது சான்டாகிளாஸ் அல்ல. ஏனெனில் அது உண்மையல்ல. அது கட்டுக் கதை என்றும், அது எல்லா சத்தியத்துக்கும் சத்தியமாகிய தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்து வந்ததென்றும் ஒரு நாள் அறிந்து கொள்வீர்கள். இன்று காலை இந்த சிறு வெகுமதியை நாங்கள் ஏன் கொடுக்கிறோம் என்றால், ஒரு காலத்தில் தேவன் மானிடருக்கு மிகப் பெரிய வெகுமதியாகிய தமது குமாரனைக் கொடுத்தார். அதை நாம் மிக எளிய முறையில் தெரியப்படுத்துகிறோம். எந்த ஒன்றும் அதற்கு ஈடாக முடியாது. ஆனால் மரிக்க வேண்டிய மானிடராகிய நாம் இதை ஒருவருக்கொருவர் அளித்துக் கொள்கிறோம். 4நான் கூற நினைத்ததைக் கூற அடுத்த ஞாயிறு வரை காத்திருக்கப் போகிறேன் (நான் எப்படியும் காத்திருப்பேன் என்று எண்ணுகிறேன்). எங்களுக்கு தரிசனத்தின் மூலம் வீட்டில் ஒன்று வெளிப்படுத்தப்பட்டது. அதை நான் பின்பற்றியாக வேண்டும். அது ஒரு வகையில் கரடுமுரடாக தோன்றக் கூடும். தேவன் கூறுவது கடினமான ஒன்று என்று நாங்கள் ஒருபோதும் நினைக்க விரும்பவில்லை. அவருடைய சுமை இலகுவானது. அடுத்த ஞாயிறு, தேவனுக்கு சித்தமானால், நாங்கள் இங்கு ஆராதனை நடத்தப் போகிறோம் (அது புத்தாண்டுக்கு முந்தின மாலைக்கு சற்று முன்பு) இந்த ஆராதனையை நாங்கள் நடத்துவதில் கர்த்தர் பிரியப்பட்டால் அது காலை ஆராதனையாயிருக்கும். நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். ஒருக்கால் ஞானஸ்நான ஆராதனையும் இருக்கும். பிறகு நான் நினைக்கிறேன். நம்முடைய நண்பர்களுக்கும் இதைக் குறித்து அறிவித்தால் அவர்களும் வரலாமென்று. அப்படியானால் நாம் ஞாயிறு காலை, ஞாயிறு மாலை ஆராதனைகளை வைப்போம். அதன் பிறகு புத்தாண்டு ஆராதனைக்கு இங்கு தங்க விரும்புகிறவர்களுக்கு, நாங்கள் இரவு விழிப்பு ஆராதனை ஒன்றை நடத்தப் போகிறோம். 5அப்பொழுது அநேக போதகர்கள் இங்கு வந்து புத்தாண்டு தொடங்கும் நள்ளிரவு வரைக்கும் பேசுவார்கள். அந்த போதகர்களை நாங்கள் இங்கு வந்து பேசும்படி அழைக்கப் போகிறோம். கர்த்தருக்கு சித்தமானால், புத்தாண்டு தொடங்கும் இரவன்று, நானும் பேசுபவர்களில் ஒருவனாக இருக்க விரும்புகின்றேன். அதன் பிறகு அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த சபையில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் காரியங்களையும், ஏற்கனவே நடந்த காரியங்களையும் வரிசைப்படுத்தி, தேவன் எவ்வாறு தம் ஜனங்களுடன் ஈடுபடுகிறார் என்பதைக் காண்பித்து. அதை உச்சக் கட்டத்துக்கு கொண்டு வரப்போகிறேன். எங்களுக்கு நேர்ந்த வருமான வரி விஷயத்தைக் குறித்து என்ன நடந்ததென்று உங்களில் பலர் வியக்கக் கூடும். அது முடிந்துவிட்டது. அது முடிவுபெற என்ன நடந்தது என்பதைக் குறித்தும் உங்களிடம் கூற விரும்புகிறேன். நான் நினைக்கிறேன், அது... அடுத்த ஞாயிறன்று அதை நான் மறுபடியும் கூற வேண்டும். எனவே நான் அடுத்த ஞாயிறு வரைக்கும் காத்திருந்து, இன்றைக்கு வார்த்தையிலிருந்து சிறிது உங்களிடம் பேச முயல்வேன். அடுத்த ஞாயிறன்று. தேவனுக்கு சித்தமானால், அது எப்படி தொடங்கினது என்று உங்களுக்கு எடுத்துக் கூறி, ''கர்த்தர் சொன்ன ஒவ்வொன்றையும் உங்களிடம் கொண்டு வந்து, அவைகள் சரியான இடத்தில் பொருந்துவதை நீங்கள் காணும்படி செய்வேன். அவர் எதையும் தவறாக கூறுவதில்லை. 6இன்று காலை உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதை நான் ஒருக்கால் அடுத்த ஞாயிறு கூற மாட்டேன். அது நேற்று நடந்த ஒரு விஷயம். இன்று காலை இங்கு வர எனக்கு சற்று தயக்கம் ஏற்பட்டது. நான் அதிக களைப்புற்றிருந்த படியால், இங்கு வரவேண்டும் என்ற உணர்வு எனக்கு உண்டாகவில்லை. ஆனால் நான் இங்கிருப்பதனால், என்னால் முடிந்தவரை வரப் பிரயாசப்படுவேன் என்று எண்ணினேன். 7சென்ற இரவுக்கு முந்தின இரவு சகோதரன் மற்றும் சகோதரி சாத்மன் என்னுடன் இருந்தனர். (சகோ. சாத்மன் இந்த சபையின் தர்ம கர்த்தாக்களில் ஒருவர் என்று இங்குள்ள நாம் அனைவரும் அறிவோம். அவரும் அவருடைய மனைவியும்). அவர்கள் என்னையும் என் மனைவியையும் காண வந்திருந்தனர். பீனிக்ஸிலும் சுற்று வட்டாரத்திலும் நடக்கவிருக்கும் கூட்டங்களைக் குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். (அது கர்த்தருக்கு சித்தமானால்). நாங்கள் இரவு 10.30 மணி வரைக்கும் பேசினோம் என்று நினைக்கிறேன். நான் 11.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றேன். இரவில் ஒரு சொப்பனம் கண்டேன். அந்த சொப்பனத்தில திடகாத்திரமுள்ள, பெரிய உருவம் படைத்த ஒரு மனிதனைக் கண்டேன். அவர் சொப்பனத்தில் என் தகப்பனாக எண்ணப்பட்டவர். நான் ஒரு ஸ்திரீயைக் கண்டேன். காண்பதற்கு என் தாயைப் போல் இல்லை. இருப்பினும் அவள் சொப்பனத்தில் என் தாயாக எண்ணப்பட்டாள். என் தகப்பனாக கருதப்பட்ட இந்த மனிதன் (இந்த ஸ்திரீயின் கணவன்) அவளைக் கொடுமைப்படுத்தினான். அவன் கையில் ஒரு பெரிய மரக்கட்டை இருந்தது. அவளை அவன் இப்படி பிடித்துக் கொண்டு அந்த மரக்கட்டையால் அவளை அடிப்பான். அவள் கீழே விழுந்து விடுவாள். சிறிது கழிந்து அவள் எழுந்திருப்பாள். சுற்று முற்றும் நடந்து கொண்டிருக்கும் அவனுக்கு அவளை மறுபடியும் அடிக்க வேண்டுமெனும் எண்ணம் உண்டாகும். அவன் மறுபடியும் அவளை அடிப்பான். நான் சொப்பனத்தில் தூர நின்று இதை கவனித்துக் கொண்டிருந்தேன். 8முடிவில் எனக்கு போதுமென்றாகிவிட்டது. என் தகப்பனாக கருதப்பட்ட இந்த மனிதனைக் காட்டிலும் நான் உருவில் மிகச் சிறியவனாயிருந்தேன். நான் அவனிடம் நடந்து சென்று, என் விரலை அவன் முகத்தின் மேல் வைத்து, ''அவளை மறுபடியும் அடிக்காதே“ என்றேன். அப்படி நான் சொன்ன போது, எனக்கு ஒன்று சம்பவிக்க தொடங்கினது. என் கரங்கள் வளரத் தொடங்கி, பலமுள்ள தசைகள் உண்டாயின. அப்படிப்பட்ட தசைகளை நான் கண்டதேயில்லை. அந்த மனிதனின் கழுத்துப் பட்டையை நான் பிடித்து, ”அவளை மறுபடியும் அடிக்காதோ அப்படி செய்தால் என்னிடம் சண்டைக்கு வா.“ என்றேன். அந்த மனிதனுக்கு பயமுண்டாகி அவளை விட்டுவிட்டான். நான் விழித்துக் கொண்டேன். நான் படுக்கையில் படுத்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, ஒரு நிமிடத்தில் அதன் அர்த்தம் தெளிவானது. அந்த ஸ்திரீ சபைக்கு உதாரணமாயிருந்தாள். எனவே அவள் ஒரு வகையில் தாயாகக் கருதப்பட்டாள். தகப்பன் தான் அவள் மேல் ஆதிக்கம் கொண்டிருந்த ஸ்தாபனம். கணவன் மனைவியின் மேல் ஆதிக்கம் செலுத்துவது போல, ஸ்தாபனமும் சபையின் மேல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஸ்தாபனங்கள் சபையை அடித்து கீழே தள்ளி, அவள் எழுந்து நிற்கவும் கூட சம்மதிப்பதில்லை. அவள் எழுந்து நிற்க முயலும் ஒவ்வொரு முறையும், அதிலுள்ள ஜனங்கள் (அந்த ஸ்தாபனம்) அவளை அடித்து கீழே வீழ்த்துகிறது. எனக்கு விசுவாசத் தசைகள் உண்டாகி, என் விரலை சுட்டிக்காட்டி, ''என்னிடம் சண்டைக்கு வா“ என்று என்னால் கூற முடிந்தது. ஏனெனில் தேவனுக்கு சொந்தமான சிலர் இன்னும் அதற்குள் இருக்கின்றனர். அது சரியாக இருந்தது. 9நாங்கள் இரண்டு, மூன்று மணி நேரமாக உறங்கவேயில்லை என்று நினைக்கிறேன். என் மகள் ரெபேக்காள் லூயிவில்லிலுள்ள மெதோடிஸ்டு மருத்துவமனையில் வேலை செய்கிறாள். அவள் பொழுதுபோக்கு நர்ஸ் பணிக்கு பயிற்சி பெற்றவள். அவர்களை அவர்கள் - 'காண்டி ஸ்ட்ரைப்பர்ஸ்' (Candy Stripers) என்றழைக்கின்றனர் - அப்படி ஏதோ ஒரு பெயரால். அன்று காலை வரும்படி அவர்கள் அவளிடம் தொலைபேசியில் கூறினர். அது தான் என்னை உறக்கத்தினின்று எழுப்பினது. அது விடியற்காலையில். அவளையும் அவளுடன் படித்த மாணவிகளையும் (அவர்கள் எல்லோரும் ஒன்றாக மருத்துவமனையில் வேலை செய்கின்றனர்) அவர்கள் லூயிவில்லுக்கு கொண்டு செல்ல உத்தேசித்திருந்தனர். அவர்கள் 10.00 மணிக்கு அங்கு இருக்க வேண்டும். அவளால் ஏன் படுக்கை அறைக்குள் செல்ல முடியவில்லை என்று என் மனைவி வியந்தாள். அதை நான் பூட்டியிருந்தேன். 10என் வாழ்க்கையில் அநேக காரியங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இது போன்ற ஒன்று நிகழ்ந்ததில்லை. நான் நினைவற்ற நிலையை (trance) அடைந்தேன். அதன் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒன்று என் வாழ்க்கையில் நடந்ததேயில்லை. ஆனால் எனக்கு முன்பாக அது ஒரு தரிசனம் போல் காணப்பட்டது. அந்த தரிசனத்தில் நானும் இருந்தேன். ஆனால் நான் என் மகன் ஜோசப்புடன் பேசிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். நான் மேலே பார்த்தபோது, கூர்நுனிக் கோபுர வடிவில் அரை அங்குலம் நீளமுள்ள சிறு பறவைகள் எனக்கு முன் இருக்க கண்டேன். அவை மரக்கிளைகளில் உட்கார்ந்து கொண்டிருந்தன. மேல் கிளையில் மூன்று அல்லது நான்கு பறவைகள் இருந்தன, அடுத்த கிளையில் எட்டு அல்லது பத்து பறவைகள் இருந்தன. கீழ் கிளையில் பதினைந்து அல்லது இருபது பறவைகள் இருந்தன. அவை சிறு போர் வீரர்கள். ஏனெனில் அவைகளின் சிறகுகள் உதிர்ந்திருந்தன. அவைகள் என்னிடம் ஏதோ கூற முயன்றது போல் தோன்றினது. 11நான் மேற்கு பாகத்தில் இருந்தேன் (அது அரிசோனாவிலுள்ள டூசானைப் போல் காணப்பட்டது). பறவைகள் கிழக்கு திசையை நோக்கிக் கொண்டிருந்தன. நான் உன்னிப்பாக கேட்டேன். அவைகள் என்னிடம் ஏதோ கூற முயன்றது போல் தோன்றினது. அவைகளின் சிறகுகள் உதிர்ந்திருந்தன. அவை யுத்தத்தில் காயப்பட்டிருந்தன. திடீரென்று ஒரு பறவை இப்படி குதித்து மற்றொரு பறவையின் இடத்தை எடுத்துக் கொள்ளத் தொடங்கினது. அப்பொழுது அவை வேகமாக அவ்விடத்தை விட்டு கிழக்கு நோக்கி பறந்தன. அவை அப்படி செய்த போது. அவைகளிலிருந்து புறாக்களைப் போன்ற பெரிய பறவைகள் கூர்மையான சிறகுகள் உடையவைகளாய் தோன்றின. அவை கூட்டமாக வந்து அந்த சிறு பறவைகளைக் காட்டிலும் மிக வேகமாக கிழக்கு நோக்கி பறந்தன. 12நான் அப்பொழுதும் என்... என்னுடைய 'இரு உள்ளுணர்வுகளும்' (Consciences) ஒன்றாகவே பணிபுரிந்தன. நான் அங்கு நின்று கொண்டிருப்பதை அறிந்தேன். அதே சமயத்தில் நான் வேறெங்கோ உள்ளதாக அறிந்தேன். ''இது ஒரு தரிசனம். இதன் அர்த்தம் என்னவென்று நான் அறிய வேண்டும்“ என்று எண்ணினேன். இரண்டாவது கூட்டம் பறவைகள் தோன்றினவுடனே, நான் மேற்கு திசையை நோக்கினேன். அப்பொழுது என் வாழ்க்கையிலேயே நான் கண்டிராத மிக வல்லமையுள்ள ஐந்து தூதர்கள் கூர்நுனிக் கோபுர வடிவில் - ஒவ்வொரு பக்கம் இரண்டு பேரும், ஒருவர் மேலுமாக - பயங்கர வேகத்தில் பறந்து வந்தனர். அப்படிப்பட்ட வேகத்தை நான் கண்டதேயில்லை... அவர்கள் தலைகளை பின்பக்கம் சாய்த்தவர்களாய், கூர்மையான சிறகுகளுடன் வேகமாய் பறந்து வந்தனர். அப்பொழுது சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை என் மேல் விழுந்து என்னைத் தரையிலிருந்து மேலே தூக்கினது - தரையிலிருந்து வெகு தூரம் மேலே (ஜோசப் பேசுவதை என்னால் அப்பொழுதும் கேட்க முடிந்தது). அப்பொழுது ஒலித் தடையையும் (Sound barrier) மீறினது போன்ற அவ்வளவு பெரிய சத்தம் புறப்பட்டு தெற்கு நோக்கி வெகு தூரம் சென்றது. நான் தூக்கப்பட்டபோது, தூதர்கள் பயங்கர வேகத்தில் வந்து கொண்டிருந்தனர்... அவர்களை இப்பொழுதும் கூட என்னால் காண முடிகிறது. பாருங்கள். அவர்கள் இப்படி கூர்நுனிக் கோபுர வடிவில் வேகமாக வந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர். (நான் கனவு காணவில்லை. இல்லை. நான் இப்பொழுது உள்ளது போல் நன்றாக கண் விழித்துக் கொண்டிருந்தேன்). 13அவர்கள் பயங்கர வேகத்தில் வந்து கொண்டிருந்தனர். நான் மேலே தூக்கப்பட்ட போது, நான் எண்ணினேன்... நான் வெடி சத்தம் போன்ற சத்தத்தைக் கேட்டேன். அது ஒலித் தடையையும் மீறினது போன்ற சத்தம். நான் கேட்ட போது. “இது ஒருக்கால் ஒருவிதமான வெடி விபத்தில் நான் கொல்லப்பட நேரிடும் என்பதைக் குறிக்கலாம்” என்று எண்ணினேன். ஆனால் உடனே, ''அப்படி இருக்காது. ஏனெனில் அது வெடி விபத்தாயிருந்தால், ஜோசப்பும் அதில் அகப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நான் அங்கிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அவன் இன்னமும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அவன் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது. அதுவாயிருக்காது“ என்று எண்ணினேன். இதெல்லாம் தரிசனத்தில் தோன்றின சம்பவம். பாருங்கள், இது தரிசனத்தில் உண்டானது. பிறகு திடீரென்று... அவர்கள் என்னைச் சூழ இருப்பதை உணர்ந்தேன். அவர்களை என்னால் காண முடியவில்லை. ஆனால் அவர்களுடைய கூர்நுனிக் கோபுர கூட்டத்திற்குள் நான் கொண்டு வரப்பட்டேன், அதாவது இந்த ஐந்து தூதர்கள் அடங்கிய கூட்டத்தின் உள்ளே, ''மரணத் தூதன் ஒருவனே. ஆனால் ஐந்து என்பது கிருபையைக் குறிக்கிறது“ என்று எண்ணினேன். அப்படித்தான் நான் நினைத்தேன். பிறகு நான், ''ஓ அவர்கள் செய்தியுடன் என்னிடம் வருகின்றனர். இது என் இரண்டாம் உச்சக் கூட்டம். கர்த்தரிடத்திலிருந்து அவர்கள் செய்தியை என்னிடம் கொண்டு வருகின்றனர்” என்று எண்ணினவனாய், என்னால் முடிந்தவரை ''ஓ, இயேசுவே! நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்று உரக்க சத்தமிட்டேன்'', அப்படி நான் செய்த போது, அது என்னை விட்டுப் போய்விட்டது. 14அப்பொழுது முதல் என் மனநிலை சரியில்லை. நான்... நேற்று பூராவும் நான் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. என் மனதை தெளிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. தேவனுடைய மகிமையும் வல்லமையும்... அது என்னை விட்டுச் சென்ற போது, என் உடல் முழுவதும் மரத்துப் போயிருந்தது. என் கைகளை நான் தேய்த்து நோக்கினேன். ''என்னால் மூச்சு விட முடியவில்லையே'' என்று எண்ணினவனாய், இங்கும் அங்கும் நடந்தேன். ''இதன் அர்த்தம் என்ன கர்த்தாவே? இதன் அர்த்தம் என்ன?'' என்றேன். பிறகு நான் நடப்பதை நிறுத்திக் கொண்டு, தேவனாகிய கர்த்தாவே, உமது ஊழியக்காரனுக்கு... இது ஏன் நடந்ததென்று தெரியவில்லை. கர்த்தாவே, ''இதை எனக்குத் தெரியப்படுத்தும்“ என்றேன். 15நல்லது. அப்பொழுது... நான் தேவனுடைய வல்லமையைக் குறித்து உங்களிடம் கூறும்போது, அதை என்னால் விவரிக்க இயலாது. அதை விவரிக்க ஒரு வழியும் இல்லை. கூட்டங்களில் நீங்கள் பெறும் அபிஷேகம் போன்றதல்ல அது. அது கர்த்தருடைய ஆசீர்வாதம். ஆனால் இது புனிதமான... ஓ, என்னே! அதை மனிதனால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. அது என்னை மிகவும் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தது. அது ஆசீர்வாதமல்ல, அது தொல்லை. நான் கலக்கமுற்றேன். நான் மாத்திரம்... அது என்னவென்றும், அதனால் ஏற்பட்ட உணர்ச்சி என்னவென்றும் ஜனங்களிடம் ஏதாவதொரு வழியில் விவரிக்க என்னால் முடியுமானால் இங்கு உட்கார்ந்து கொண்டு களிகூர விரும்புவது போன்றதல்ல அது. அது உங்கள் ஒவ்வொரு நரம்பையும்... அது பயத்துக்கு அப்பாற்பட்டது. அது அச்சுறுத்தலுக்கு அப்பாற்பட்டது. அது ஒருவகை பரிசுத்தமான பயபக்தி... அதை விவரிக்கவே முடியாது. என் முதுகு முழுவதும், என் முதுகெலும்பின் மேலிருந்து கீழ்வரைக்கும். என் விரல்கள் அனைத்தும், என் பாதங்கள், என் கால் விரல்கள், என் உடல் முழுவதுமே மரத்துப் போயிருந்தது. பாருங்கள், நீங்கள் இவ்வுலகத்தை விட்டு வேறெங்கோ இருந்தது போல். அந்த உணர்ச்சி என்னைப் படிப்படியாக விட்டு சென்றது. நான் கர்த்தரிடம். ''ஓ, தேவனே, எனக்குத் தெரிவிக்கமாட்டீரோ?“ என்று முறையிட்டேன். அந்த வல்லமைக்கு மிகவும் அருகாமையில் உள்ள மற்றொரு சம்பவம் நான் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள சூரிக் (Zurich) நகரத்தில் இருந்தபோது நடந்தது. அந்த சமயம் அவர், ஒரு ஆங்கிலேயன் குதிரை மேல் சவாரி செய்து ஆப்பிரிக்கா வழியாக வருவதை ஒரு ஜெர்மானிய கழுகு கவனித்துக் கொண்டிருப்பதை எனக்குக் காண்பித்தார். அவர், ''எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள்“ என்று கூறினார். 16எனக்கு உதவி செய்யும்படி நான் கர்த்தரிடம் கதறினேன். அதன் அர்த்தத்தை எனக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அவரிடம் வேண்டினேன். ஏனெனில் அதன் அர்த்தம். நான் கொல்லப்படப் போகிறேன் என்பது அதன் அர்த்தமானால், அதைக் குறித்து என் குடும்பத்தினரிடம் ஒன்றும் கூறமாட்டேன். நான் பரம வீடு செல்ல நேரமாகிவிட்டால், நான் வீடு செல்வேன். அவ்வளவுதான். அது தான் அதன் அர்த்தமானால், அதை என் குடும்பத்தினரிடம் கூற நான் விரும்பவில்லை. அதைக் குறித்து அவர்கள் எதையும் அறிய நான் விரும்பவில்லை. அது நடக்கட்டும், அவ்வளவுதான். நான் கர்த்தாவே, எனக்கு உதவி செய்யும். நான் வீட்டுக்கு வர அது எனக்கு அழைப்பாயிருக்குமானால், ''என் குடும்பத்தினரிடம் அதைக் கூற நான் விரும்பவில்லை“ என்றேன். பாருங்கள். நான் சொன்னேன்... உங்களுக்குத் தெரியும்... ''நீங்கள் ஏன் தரிசனம் என்ன உரைத்தது என்பதைக் குறித்து சிந்திக்கவில்லை?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அப்பொழுது அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து என்னால் சிந்திக்க முடியவில்லை. என்னால் முடியவேயில்லை. 17நான் நினைத்தேன்... நான் கலங்கினேன், குழப்பமுற்றேன். எப்படி சிந்திப்பதென்று எனக்கு தெரியவில்லை. என்னால் சிந்திக்கவே முடியவில்லை. நான் பரலோகப் பிதாவே, வெடித்தல் என்னை எடுத்துக் கொள்ளுமானால், இப்பொழுது அதை நான் அறியட்டும். அதைக் குறித்து நான் யாரிடமும் கூற மாட்டேன். அதற்கு அறிகுறியாக உம்முடைய மகிமையும் வல்லமையும் மறுபடியும் இறங்கி, என்னை மேலே தூக்கட்டும், அல்லது உம்முடைய மகிமை என்மேல் இறங்கட்டும். அப்பொழுது அது தான் அதன் அர்த்தம் என்று அறிந்து அதை எனக்குள்ளே இரகசியமாக வைத்துக் கொள்வேன்“ என்றேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அப்பொழுது நான், ''ஆண்டவரே, என்னுடைய ஊழியத்துக்கென்று உம்முடைய தூதனை நீர் அனுப்பப் போவதற்கு அது அடையாளம் என்றால், உம்முடைய வல்லமை என் மேல் விழட்டும்” என்றேன். அப்பொழுது என்னை அறையிலிருந்து தூக்கிச் செல்லும் அளவுக்கு வல்லமை என்மேல் விழுந்தது. எனவே என் வேதாகமத்தைக் கையில் கொண்டவனாய் இதை கூறுகிறேன். என் சுய நினைவுக்கு வந்து, எனக்குதவி செய்ய தேவனிடம் கோரினேன். அப்படி நான் செய்தபோது, இதனுடன் சம்பந்தப்பட்ட சிலவற்றை அவர் வேதாகமத்திலிருந்து எனக்குக் காண்பித்தார். அதே இடத்தில்! உண்மையில் அது தான் அதுவா... நான் எப்படி அதை செய்தேன் என்று எண்ணினேன். ஓ, நண்பர்களே, இவைகளை என்னால் விவரிக்க இயலாது. எனக்குத் தெரிந்த எதற்கும் இது மேலானது. 18என் மனைவி வினோதமான ஸ்திரீ, உலகில் மிகச் சிறந்தவர்களில் ஒருத்தி. சில நாட்கள் நான் ஒன்றுமே அவளிடம் கூறவில்லை, என் வேலையைச் செய்து கொண்டிருந்தேன். ஏதோ ஒன்று நடந்தது என்பதை அவள் அறிந்து கொண்டாள். அவளிடம் நான் அதைப் பற்றி கூறினபோது, அவள், “உங்களுக்குத் தெரியுமா பில், அந்த காரியங்கள் பெரும்பாலானவைகளில் உங்களை நான் காண்கிறேன். நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன். உங்களை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். ஆனால் உண்மையில் அதில் ஏதோ ஒன்றுள்ளது” என்றாள். அது என்னை அசைத்தது. அந்த வெடி சப்தம். அந்த தூதர்கள் அப்படி வேகமாக வருதல். அவர்கள் ஐந்து பேர் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமாக வருதல்... நான் இங்கு வரைந்தது போன்ற கூர்நுனிக் கோபுர வடிவில் அவர்கள் வந்தனர். அது எப்படி காணப்பட்டதென்றால்... முதலில் அது ஒரு விதமான... தூரத்தில் அது புறாக்களின் நிறத்தை போல் காணப்பட்டது. அவர்கள் இந்த பக்கமாக வந்தனர். அவர்கள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு பேர், பிறகு ஒரு தூதன் மேலேயிருந்தார். ஆகமொத்தம் ஐந்து பேர். அவர்கள் அதிவேகமாக வந்தனர். அந்த வேகத்துடன் ஜெட் விமானத்தின் வேகத்தையோ, வேறெதையுமே ஒப்பிட முடியாது. 19அவர்களை என்னால் காணமுடிகிறது. அவர்கள் தலைகள் ஒரு விதம் பக்கவாட்டில் திருப்பப்பட்டிருந்தன. அந்த சிறகுகள் பின்பக்கம் நோக்கியிருந்தன. போருக்கு ஆயத்தமானவர்களாய் அப்படி இங்கு வந்தார்கள். வியூ (சகோ. பிரான்ஹாம் அதை விவரிக்க விசில் சப்தமிடுகிறார் - ஆசி). அவர்கள் கீழே இறங்கி வந்து அவர்களுடைய அந்த கூர்நுனிக் கோபுரக் கூட்டத்துக்குள் என்னை அடக்கிக் கொண்டார்கள். நான் தரைக்கு மேல் தூக்கப்பட்டதைக் கண்டேன். நான் நினைத்தேன் ஒருக்கால்... தூரத்தில் நான் “வூம்” என்னும் முழக்கத்தைக் கேட்டேன் - ஒலித்தடையை மீறின வேகத்துடன் செல்லும் விமானம் இடும் முழக்கம் போல். நீங்கள் அப்படிப்பட்ட சத்தத்தைக் கேட்டிருப்பீர்கள் - தூரத்து முழக்கம். இந்த தரிசனம் என்னை விட்டுப் போன பிறகு நான் ஒரு வெடி விபத்தில் கொல்லப்படுவேன் என்பதற்கு இது அடையாளமாயிருக்கலாம் என்று எண்ணினேன். “நான் மேலே தூக்கப்பட்டேன். இதோ அவர்கள் இங்கு எங்கோ உள்ளனர். நான் கூர்நுனிக் கோபுர வடிவிலுள்ள தூதர்களின் மத்தியில் இருக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. ஒருக்கால் என்னை வீடு கொண்டு செல்ல கர்த்தர் வந்திருக்கக் கூடும் என்று எண்ணினேன். பிறகு ஜோசப் கீழேயிருந்து, ''அப்பா'' என்று கூப்பிடுவதைக் கேட்டேன். அது அப்படியிருக்குமானால், ''அது அவனையும் கொண்டு செல்ல வேண்டுமே“ என்று நினைத்தேன். அப்பொழுது ஏதோ ஒன்று, ''நீ...'' என்றது. ஞாபகம் கொள்ளுங்கள், நான் எப்பொழுதுமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிற செய்திக்காக விழிப்புடன் காத்திருக்கிறேன். 20அன்றொரு நாள். அண்மையில் இங்கு எனக்குக் கிடைக்கப் பெற்ற தரிசனத்தில், என்ன நடக்கப் போகிறதென்று என்னிடம் கூறப்பட்டது. நான் சூரியனில் நின்று கொண்டு இந்த இடத்துக்கு பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த தூதன் என்னிடம், இரண்டாம் உச்சக்கட்டம் இனிமேல் தான் வரவேண்டும் என்பதை ஞாபகம் கொள்“ என்றான். ''ஒரு செய்தி கிடைக்கும்” என்று எண்ணினேன். இங்கு நான் அளித்த செய்தி ஞாபகமுள்ளதா? ஏழு சத்தங்கள் முழங்கினவைகளும், முத்திரைகளும் தேவனுடைய வார்த்தையில் எழுதியும் கூட வைக்கப்படவில்லை. அந்த “தலைக்கல்” திறக்கப்படுதல். ஞாபகமுள்ளதா? அது என்னை அந்த கூர்நுனிக் கோபுரத்துக்குள் கொண்டு சென்றது. ஜுனியர் ஜாக்சன், நீங்கள் இங்க இருக்க நேர்ந்தால், அண்மையில் நீங்கள் எனக்கு எழுதிக் கொடுத்த அந்த சொப்பனம் - அதை இன்று காலை நான் கூறப் போவதில்லை. நீங்கள் மிகவும்... தேவன் மிகவும் பரிபூரணமாக... உங்களுக்கு அதன் அர்த்தத்தை கொடுக்காததனால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஏதோ ஒன்று அசைவதை நான் காண்கிறேன். ஜே. டி. - அதுவேதான். பாருங்கள். அதை நான் அறிந்தேன். சகோதரி காலின்ஸ் - அதுவும் அதுவே தான். அந்தஆறு சொப்பனங்களும் ஒரே காரியத்தை அறிவித்தன. அதன் பிறகு அநேக ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் அனைவரிடமும் நான் கூறின தரிசனம். அது அன்றொரு நாள் நிறைவேறினது - (அது நிறைவேறும்). இதோ அது இங்குள்ளது... எல்லாமே அங்குள்ளது . ஏதோ ஒன்று அசைந்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. தேவன் எனக்குதவி செய்வாராக என்பதே என் ஜெபம். நாம் ஜெபம் செய்வோம்: 21பரலோகப் பிதாவே, நாங்கள் அழிந்து போகக் கூடிய மானிடரே. இந்த காலை வேளையில் இங்கு நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, நான்... இந்த சிறு மந்தையையும் சபையையும் நடத்த என்னை நீர் அனுப்பினீர். நான் என் முடிவுக்கு வந்திருக்கிறேன். வழி எதுவென்றும், என்ன எது வருகிறதென்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த ஒன்றை மாத்திரம் நான் அறிந்திருக்கிறேன். உம்முடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் உம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று நீர் உரைத்திருக்கிறீர். தேவனே, உம்முடைய மகத்தான இரக்கத்தின் கரம் எங்கள் மேல் இருக்க வேண்டுமென்று உம்மை நோக்கி வேண்டிக் கொள்கிறேன். நீரே தேவன் என்று நாங்கள் உண்மையாக அறிந்திருக்கிறோம். நீர் பூர்வ காலத்தில் மாத்திரம் வாழ்ந்த தேவன் அல்ல, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் எப்பொழுதும் தேவனாயிருந்து வந்திருக்கிறீர், நீர் இனிமேலும் தேவனாயிருப்பீர். காலம் என்று ஒன்று இருப்பதற்கு முன்பே நீர் தேவனாயிருக்கிறீர். காலம் முடிந்த பிறகும், நீர் தேவனாயிருப்பீர். கர்த்தாவே, நாங்கள் உம்முடைய கரங்களில் இருக்கிறோம். நாங்கள் வெறும் களிமண். நீர் எங்களை வனையும் குயவன். கர்த்தாவே, உம்மை கனப்படுத்த நாங்கள் சிறந்த ஆராதனையை ஏறெடுப்பதற்கென எங்களை வனைவீராக. பிதாவே, இதை அருளும். நாங்கள் உம்முடைய கரங்களில் இருக்கிறோம். 22எங்களை நாங்கள் இங்கு கொண்டு வர ஒரு வழியும் இல்லை, இங்கிருந்து நாங்கள் எப்படி வெளியே செல்வதென்றும் எங்களுக்கு தெரியாது. ஆனால் கர்த்தாவே, எங்களுக்கு நீர் ஜீவனை அளித்திருக்கிறீர். நீர்... எங்கள் வாழ்க்கையை நாங்கள் உமக்கு அர்ப்பணித்த போது எங்களுக்கு நீர் அதற்கு பதிலாக நித்திய ஜீவனை அளித்திருக்கிறீர். எங்கள் விசுவாசம் அதை எங்கள் சரீரத்துக்குள் கொண்டு வந்தது. அதற்காக உம்மை நாங்கள் நேசிக்கிறோம். ஏனெனில் என்றாவது ஒரு நாள் உம்மை காண்போம் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் உமது மகிமையில் இருப்பீர். அவரை நாங்கள் காண்போம். “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே. உலகம் உண்டாவதற்கு முன்பே உனக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற சந்தோஷத்துக்குள் பிரவேசி” என்னும் வார்த்தைகளைக் கேட்க நாங்கள் ஆவலுள்ளவர்களாயிருக்கிறோம். ஓ, தேவனே, நாம் எல்லோரும் சந்திக்கும் நேரம் வரைக்கும் எங்களை நீர் வழி நடத்துவீராக. நாங்கள் உம்முடைய ஊழியக்காரர்கள். எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே, இந்த மகத்தான தரிசனங்கள் உமது அடியேனுக்கு மிக அதிகமானவை. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவை எனக்கு கிடைக்கின்றன என்று மாத்திரம் அறிவேன். நான் அதில் கண்டதும் அதில் கூறப்பட்டவைகளையும் மாத்திரமே என்னால் எடுத்துரைக்க முடியும். கர்த்தாவே, சில நேரங்களில் அது எனக்கு பயத்தை விளைவிக்கிறது. என்ன செய்வதென்று நான் வியக்கிறேன். அப்பொழுது நான் வேதாகமத்தை எடுத்துப் படித்து, ஏசாயா தேவாலயத்தில், தங்கள் பாதங்களின் மேல் செட்டைகளையுடைய தேவ தூதர்களைக் கண்டபோது அவனுக்கு எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். “ஐயோ! அதமானேன். கர்த்தருடைய மகிமையை என் கண்கள் கண்டதே'' என்று அவன் சத்தமிட்டதில் வியப்பொன்றுமில்லை. தீர்க்கதரிசி, அவன் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன் என்று சப்தமிட்டான். இருப்பினும் அவன் ஒரு தீர்க்கதரிசியே. தேவ தூதன் குறட்டை கையிலெடுத்து ஒரு நெருப்புத் தழலை எடுத்து அவன் வாயைத் தொட்டு சுத்திகரித்து, ''இப்பொழுது போய் தீர்க்கதரிசனம் உரைப்பாயாக” என்று சொன்னான். 23கர்த்தராகிய தேவனே... ஆண்டவர், “யார் நம்முடைய காரியமாய் இந்த பொல்லாத விபச்சார சந்ததியிடத்திற்கு போவான்? என்று கேட்ட போது'', ஏசாயா, ”இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்'' என்றான். ஓ, தேவனே, அது மறுபடியும் நிகழ்வதாக ஓ, கர்த்தாவே, அது மறுபடியும் வரட்டும். பரிசுத்த ஆவியை. சுத்திகரிக்கும் அக்கினியுடன் அனுப்புவீராக. நான் அசுத்த உதடுகளுள்ளவன், இவ்வுலகில் அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறேன் என்று நான் அறிக்கை செய்கிறேன். ஆண்டவரே, நாங்கள் உம்முடைய பார்வையில் அசுத்தமுள்ளவர்கள். ஓ, சுத்திகரிக்கும் வல்லமையை - பரிசுத்த ஆவியை - அனுப்புவீராக. ஓ, கர்த்தாவே, எங்களை சுத்திகரியும். ஆண்டவரே, உம்முடைய ஊழியக்காரனாகிய என்னை சுத்திகரித்து அதன் பிறகு பேசும். உம்முடைய ஊழியக்காரனாகிய நான் கேட்கிறேன். உமது சத்தத்தைக் கேட்க நான் வாஞ்சிக்கிறேன். நான் உம்முடையவன். கர்த்தாவே, உம்முடைய சித்தத்தின்படி என்னை உபயோகியும். என்னை நான் அதற்கென்று பலிபீடத்தின் மேல் கிடத்துகிறேன். யாராவது போக வேண்டுமென்று நீர் நினைத்தால், இதுவே அந்த நேரமானால், கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் தாமே என்னைச் சுத்திகரித்து, அபிஷேகித்து, அனுப்புவாராக! கர்த்தாவே எனக்குத் தெரியவில்லை. நான் தேவ தூதர்களைக் கண்டேன் என்று மாத்திரம் அறிவேன். இவையனைத்தும் முற்றிலும் உண்மையென்று நீர் அறிந்திருக்கிறீர். “ஐயோ, அதமானேன், எனக்குதவி செய்யும்” என்று, கர்த்தாவே நான் வேண்டுகிறேன். 24இந்த ஜனங்களை ஆசீர்வதிப்பீராக. கர்த்தருடைய பிறப்பைக் கொண்டாடும் நாளுக்கு முந்தின நாளில் இங்கு கூடி வந்திருக்கிறோம். எங்களுக்குதவி செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். உமது ஊழியக்காரனும் உமது சகோதரனுமாகிய நெவிலுக்கு இன்று காலை சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டுமென்றும் நான் பேச வேண்டுமென்றும் தோன்றினது. இப்பொழுது எனக்குதவி செய்ய வேண்டுமென்று வேண்டுகிறேன். கர்த்தாவே இங்குள்ளவர்கள்... எங்கள் அனைவருக்கும் நீர் தேவையாயிருக்கிறீர். எனவே நாங்கள் உம்முடைய வார்த்தையைப் படித்து சிறிது நேரம் தியானிக்கும் இந்நேரத்தில் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே, உம்முடைய ஆவி எங்கள் மேல் இறங்குவதாக! எங்களை பரிசுத்த ஆவியினால் அனல் மூட்டி சுத்திகரித்து, பலிபீடத்திலிருந்து புதிதாக புறப்பட்டு வருகிற தேவனுடைய செய்தியால், மரித்துக் கொண்டிருக்கிற இந்த உலகத்தை, நாங்கள் மகத்தான நித்திய தேவனை சந்திப்பதற்கு முன்பு, அசைக்கும்படி செய்யும். இதை அவருடைய அருமையான குமாரனும், எங்கள் இரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 25நான் எழுதி வைத்துள்ள சில வேத வசனங்களுக்கும் சில குறிப்புகளுக்கும் உங்கள் கவனத்தைக் கவர விரும்புகிறேன். டாக்டர் அல்லது பில்லி (யாரோ ஒருவர்), பிள்ளைகளின் காரணமாக சிறிது நேரத்தோடு விட்டுவிட வேண்டுமென்று என்னிடம் கூறினார் (அவர்கள் பிள்ளைகளுக்கு வெகுமதிகளை வைத்துள்ளனர்). உங்கள் ஞாயிறு பள்ளியை முடித்து வெளி வந்த சிறுவர்களே, சிறிது நேரம் இங்கிருங்கள். இங்கிருந்து நாங்கள் கூறுவது உங்களுக்கு சிறிது ஆழமாக இருக்கக்கூடும். ஆனால் நீங்கள் தாயுடனும் தந்தையுடனும் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருங்கள். அவர்களிடம் நான் பேச விரும்புகிறேன். 26இப்பொழுது 89-ம் சங்கீதத்திலிருந்து ஓரிரண்டு வசனங்களைப் படிக்க விரும்புகிறேன். நான் 50, 51, 52-ம் வசனங்களைப் படிக்கப் போகின்றேன். பின்னால் அமர்ந்திருக்கிறவர்களுக்கு இந்த ஒலி சத்தம் நன்றாக கேட்க முடிகிறதா? உங்களால் முடிந்தால் உங்கள் கரங்களை உயர்த்தி காண்பியுங்கள். ஏனென்றால் இந்த ஒலிபெருக்கி நன்றாக் வேலை செய்கிறதா என்று தெரியவில்லை. இந்த ஒலிபெருக்கி நன்றாகக் கேட்கிறதா, இந்த ஒலிபெருக்கி? இந்த ஒலிபெருக்கி? இந்த ஒலிபெருக்கி? இந்த பக்கத்தில் உள்ள இரண்டு ஒலிபெருக்கிகள் நன்றாக கேட்கிறதா, நல்லது இதை அவர்கள் ஒலிப்பதிவு செய்யப் பேகிறார்களா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. இது இக்காலை வேளையில் எதிர்பாராத ஒரு சம்பவம், இதை மறந்துவிடாதீர்கள், உங்கள் நண்பர் அனைவரையும்... அடுத்த ஞாயிறு கூட்டத்துக்கு நீங்கள் நிச்சயம் வர வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த சபை கட்டிடத்தை விரைவில் கட்டி முடித்து விடுவார்களென்று நினைக்கிறேன். அப்பொழுது நான் திரும்ப வந்து... தேவனுக்கு சித்தமானால், வேதாகமத்திலிருந்து அந்த ஏழு முத்திரைகளைக் குறித்து பிரசங்கம் செய்வேன். 27சங்கீதங்களின் புத்தகத்தில் 89-ம் சங்கீதம், 50-ம் வசனம் முதல். படிக்கப் போகும் தேவனுடைய வசனத்தை இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம் பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்; கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும். கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென். சங். 89 : 50 - 52 நான் சில நிமிடங்கள் பேச விரும்பும் பொருள் என்னவெனில்... இந்த வசனங்களை நீங்கள் குறித்துக் கொண்டு. அதை மறுபடியும் நன்றாகப் படியுங்கள். ஒருக்கால் அது இப்பொழுதே மறுபடியும் படிக்கத் தகுதியுள்ளது. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம் பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும் வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும். கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென். சங். 89 : 50- 52 28தாவீது கூறினதை ஆராய்ந்து படியுங்கள்... நான் பொருளாக உபயோகிக்க நினைப்பது என்னவெனில்... இது கிறிஸ்துமஸ் நேரத்துக்கு ஒரு விசித்திரமான பொருள். போன வாரம் கூட நான் விசித்திரமான ஒரு பொருளின் மேல் பேசினேன். (அது என்னவென்று இப்பொழுது மறந்துவிட்டது). அது! உலகம் விழுந்து போதல். இந்த ஞாயிறு நான் வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தை என்னும் பொருளை உபயோகித்து பேசப் போகிறேன். நான் மறுபடியும் கூற விரும்புகிறேன்: வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தை. 29தேவன் தமது கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்ற ஒரு நேரத்தையும் அந்த நேரத்துக்கான காரணத்தையும் வைத்திருக்கிறார். தேவன், தாம் என்ன செய்யப் போகிறார் என்பதை முற்றிலுமாக அறிந்திருக்கிறார். நமக்கோ அது தெரியாது. அதை அவர் நமக்களிக்கும் போது, நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆனால் அவருக்கு தெரியும். அவர் செய்யத் திட்டமிட்டுள்ளது ஒன்றும் தவறாகப் போய்விடாது. அது எல்லாம் நிறைவேறியே ஆகவேண்டும். ஒரு பொருளின் உண்மையான இயல்பை வெளியே கொண்டு வர சில சமயங்களில் கரடுமுரடான, கடினமான காரியங்கள் தேவையாயுள்ளன. மழையானது கரடுமுரடான, மின்னலடிக்கும், இடி முழங்கும் வானத்தில் பிறக்கிறதென்று உங்களுக்குத் தெரியும். மழையில்லாமல் போனால், நம்மால் உயிர் வாழ முடியாது. ஆனால் மழையை பிறப்பிக்க எது அவசியமென்று பார்த்தீர்களா? இடி, மின்னல் பிரகாசம், கோபம். அதிலிருந்து மழை உண்டாகின்றது. ஒரு வித்து புது ஜீவனைக் கொண்டு வருவதற்கென நிலத்தின் புழுதிக்குள் சென்று, அங்கு செத்து, அழுகி. துர்நாற்றமெடுக்க வேண்டியதாயுள்ளது. தங்கத்தை சுத்தப்படுத்த அதை திருப்பிப் போட்டு, திருப்பிப் போட்டு உலோக அழுக்கு அனைத்தும் போக்கும் வரைக்கும் நன்றாக அடிக்க வேண்டியதாயுள்ளது. அது பளபளப்பதனால்அல்ல. ஏனெனில் இரும்பு பைரைட் (Iron Pyrite) என்னும் கனிமப்பொருளும் கூட (அதை முட்டாளின் தங்கம் என்பர்) - உண்மையான தங்கத்தைப் போல பளபளக்கிறது. ஆனால் அவையிரண்டையும் ஒன்றாக வைத்து நோக்கினால்... அவைகளைத் தனித்தனியாக பார்த்தால், எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவையிரண்டையும் ஒன்றாக வைத்து நோக்கினால், நீங்கள் எது எதுவென்று சொல்லிவிடலாம். தங்கத்தை அடிப்பவன், அவனுடைய உருவம் தங்கத்தில் பிரதிபலிக்கும் வரைக்கும் அதை அடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். 30தேவன் ஒரு நேரத்தை நியமிக்கிறார். அவர் செய்யும் ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கமுண்டு. கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு எதுவுமே எதேச்சையாக நடப்பதில்லை. பாருங்கள்? நாம் முன் குறிக்கப்பட்டவர்கள். சகலமும் அதற்கென்று சரியாக நடக்கிறது, அவர் பொய்யுரையாதவர். ஒவ்வொன்றுக்கும் அதனதன் நேரம், காலம், வழிகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு அசைவுக்கும் பின்னால் தேவன் இருக்கிறார். எல்லாமே தவறாக சென்று கொண்டிருக்கிறதென்று நீங்கள் சில நேரத்தில் நினைக்கக் கூடும். அவை சோதனைக்கென்றும், ஏன் இப்படி நடக்கிறதென்று நாம் வியக்கவுமே நம் மேல் சுமத்தப்படுகின்றன. அந்த சோதனைகளை நாம் எப்படி ஏற்றுக் கொள்கிறோம் என்று காணவே அவை அளிக்கப்படுகின்றன. 31சில நாட்களுக்கு முன்பு நானும் சகோ. ஃபிரட்டும் சாம்ப்ளேயின் ஏரியைக் கடந்து நியூயார்க் பக்கமுள்ள கரையை அடைந்தோம். அங்கு நான் ஒரு மலையின் மேல்... ஹரிகேன் மலையின் மேல் ஏறினேன். அங்கு நான் வேட்டையாடுவது வழக்கம். அங்கு நான் எப்படி காணாமற் போனேன் என்றும், தேவன் என்னை எப்படித் திரும்பக் கொண்டு வந்தாரென்றும் எனக்கு ஞாபகம் வருகிறது. பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே அந்த புயலின் வழியாக என்னை பத்திரமாக கொண்டு சேர்த்தார்... நான் மரித்து அழிந்து போயிருப்பேன். அவ்வாறே அநேக மைல் தூரத்தில் முகாமிலிருந்த என் மனைவியும் - பில்லியும் இறந்து போயிருப்பார்கள். நான் திரும்பக் கொண்டு வரப்பட்டேன். வசந்த காலத் தொடக்கத்தில் இருந்த சிறு பனியின் மேல் நாங்கள் பயணம் செய்து முகாமை அடைந்தோம். நான் அங்கு நின்று கொண்டு சகோ. ஃபிரட்டுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “தனிமையில் வா” என்றார். நான் சிறிது தூரத்திலுள்ள புதரை அடைந்தேன். அவர் என்னிடம், “உனக்கு ஒரு கண்ணி வைக்கப்பட்டுள்ளது, ஜாக்கிரதையாயிரு” என்றார். அது என்னவென்றும் எப்படி வைக்கப்பட்டதென்றும் அவர் என்னிடம் கூறவில்லை. 32நான் திரும்பி வந்து சகோ. ஃபிரட்டிடம் கூறினேன். அன்றிரவு நான் அரங்கத்திலிருந்து சபைக்கு சென்று அங்கிருந்த ஜனங்களிடம் இதை கூறினேன். அடுத்த நாள் இரவு அது நடந்தது. அதன் பிறகு ஒரு நாள் நான் நின்று கொண்டிருந்த போது, அந்த பரியாசக்காரரைக் குறித்து அவர் என்னிடம், அவர்கள் உன் கைகளில் இருக்கிறார்கள். உன் விருப்பப்படி செய். நீ என்ன உரைத்தாலும் அது உடனே நடக்கும். என்றார். பார்த்தீர்களா? அங்கு அவபக்தியுள்ள தேவபக்தியற்ற யாரோ ஒருவன் நின்று கொண்டு கூட்டங்களைப் பார்த்து கேலி செய்து கொண்டிருந்தான் - ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண்ணும். நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் போது, அவன் கட்டிடத்தில் மோசமான விதத்தில் அவளுடன் காதல் விளையாட்டு விளையாடி எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்து கொண்டிருந்தான்... அவளுடைய தலையை இழுத்து, அவள் தொடையின் மேல் உட்கார்ந்து, அவள் தலையை இழுத்து அவளை முத்தமிட முயன்று, இவ்வாறு கூட்டங்களில் விளையாடிக் கொண்டு, மற்றவரின் கவனத்தைக் கவர்ந்தனர். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர். அவர்கள் உன் கைகளில் இருக்கிறார்கள். நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார். அப்பொழுது ஒரு பரிசுத்த அமைதல் உண்டானது. எல்லோரும் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். “ஓ, தேவனே, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று எண்ணினேன். இரண்டு நாட்களுக்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் என்னை எச்சரித்த விதமாகவே அது நடந்தது என்பதை நினைவு கூர்ந்தேன். நான், “உங்களை மன்னிக்கிறேன்” என்றேன். அதை தான் நான் கூற வேண்டுமென்று அவர் விரும்பினார். பாருங்கள்? ஏனெனில் நானும் ஒரு காலத்தில் குற்றமுள்ளவனாயிருந்தேன் - ஒருக்கால் அவ்வளவு மோசமாக அல்ல. கொஞ்சத்திலே குற்றமுள்ளவன் அநேகத்தில் குற்றமுள்ளவனாயிருக்கிறான். எனவே நான், “உங்களை மன்னிக்கிறேன்” என்றேன். அன்று அங்கிருந்தவர் இன்றும் அதற்கு சாட்சிகளாக இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அப்பொழுது பரிசுத்த ஆவி வல்லமையாக இறங்கினார். 33பாருங்கள், இவையனைத்துக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று நான் நம்புகிறேன். வல்லமையைக் கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒன்று நடக்கும் போது. அதை எவ்விதமாக பாவித்து நடந்து கொள்வீர்கள்? நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருக்கால் இவையனைத்தும் கிரியை செய்து தற்போது நாம் உள்ள நிலைக்கு வந்திருக்கக் கூடும். எனக்குத் தெரியாது. என்னால் சொல்ல முடியாது. ஆனால் எப்பொழுதுமே ஏதாவதொரு வழி இருந்து வந்துள்ளது... ஞாபகம் கொள்ளுங்கள். வார்த்தைக்கு வரும் நிந்தை... வார்த்தை எப்பொழுதுமே நிந்தையைச் சுமந்துள்ளது. காலங்கள் தோறும் அபிஷேகிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை நிந்திக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இதை புரிந்து கொள்ள முடியாத ஜனங்களுக்கு நிந்தையை ஏற்றுக் கொள்வது கடினமாயுள்ளது. 34உங்களுக்கு ஞாபகமுள்ளதா? சீஷர்கள் திரும்பி வந்து. அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் நிந்திக்கப்படுவதற்கு பாத்திரராக எண்ணப்பட்டபடியினால் சந்தோஷமடைந்தனர். அவர், ''கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்“ என்று கூறியுள்ளார். வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தை. நீங்கள் சோதிக்கப்படுவதற்காக, இந்த நிந்தையை சகிக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். கிறிஸ்துவினிடத்தில் வரும் ஒவ்வொரு மனிதனும், தேவன் அவனை நியமித்த நோக்கத்திற்கென முதலில் பிள்ளையைப் போல பயிற்சி பெற வேண்டும். நீங்கள் மாத்திரம் அமைதியாயிருப்பீர்களானால்! ஞாபகம் கொள்ளுங்கள், அவர் உங்களை இதற்கென அழைத்திருந்தால், அது நிறைவேறுவதை எதுவுமே தடை செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தை வெளிப்படாமலிருக்கச் செய்ய நரகத்தில் போதுமான பிசாசுகள் கிடையாது. நீங்கள் ஒரு நோக்கத்துக்காக பிறந்திருக்கிறீர்கள். உங்கள் இடத்தை வேறு யாருமே எடுத்துக் கொள்ள முடியாது. ஒருக்கால் உங்களைப் போல் பாவனை செய்யும் போலியாட்கள் இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் உங்கள் இடத்தை ஒருபோதும் எடுத்துக் கொள்ள முடியாது. தேவனுடைய வார்த்தை வெற்றி பெறும். அது தவற முடியாது. அதில் தான் ஒவ்வொரு கிறிஸ்தவனும் நிலைத்திருக்க வேண்டும். சோதனைகள் எல்லா பக்கங்களிலிருந்தும் வரும் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும். ஆனால் தேவனுக்கு ஒரு நோக்கமுண்டு என்பதை ஞாபகம் கொள். எல்லாமே நன்மைக்கு ஏதுவாக நடக்கும். 35தேவனுடைய வார்த்தை நிறைவேறின ஒரு சில சம்பவங்களையும் அவர்களுடைய காலத்தில் தேவனுடைய வார்த்தையைச் சுமந்தவர்களையும் இப்பொழுது நாம் நினைவுபடுத்திப் பார்ப்போம். அண்மையில் யாரோ ஒருவர், நான் எப்பொழுதுமே வேதத்திலுள்ள மனிதர்களைக் குறித்து பேசுகிறேன் என்று என்னை குற்றப்படுத்தினதாக ஆவியில் உணர்ந்தேன். ஒருக்கால் அவர் ஒலிநாடாவைக் கேட்பவராக இருக்கக் கூடும். நல்லது. அதை நான் ஒரு நோக்கத்திற்காக செய்கிறேன். நாம் காணத் தக்கதாக இவை நமக்கு திருஷ்டாந்தங்களாக எழுதப்பட்டுள்ளதாக வேதம் கூறுகிறது. அந்த ஒரு வழியில் மாத்திரமே... எனக்கு கல்வியறிவு இல்லாததனால், எனக்குள்ள ஒரே வழி வேதத்திலுள்ளவைகளை சுட்டிக்காட்டி, “இது எங்குள்ளதென்றும், இதனால் என்ன நடந்ததென்றும், இது எங்கு நடந்ததென்றும் கண்டீர்களா? என்று கூறுவதே. அப்பொழுது நீங்கள் உங்களை அங்கு பொருத்திக் கொள்கிறீர்கள். 36அண்மையில் நான் கப்பலிலுள்ள ஒரு சிறுவனைக் குறித்து பிரசங்கித்தது போல். கப்பல் தலைவன் வியாதிப்பட்டு மரணத்தருவாயிலிருந்தான். கப்பலில் வேதாகமம் உள்ளதா என்று அவன் கேட்டான். அப்பொழுது இந்த சிறுவன் வேதாகமத்தை வைத்துள்ளதாக அவர்கள் அறிந்திருந்தனர். அவன் வந்து ஏசாயா. 53: 5-ஐ கப்பல் தலைவனுக்கு படித்தான். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். அவன், “கப்பல் தலைவனே, என் தாயார் அதை எப்படி படிப்பார்கள் என்று கூற விரும்புகிறேன். ”வில்லி ப்ரூயிட்டின் மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, வில்லி ப்ரூயிட்டின் அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். இதை எல்லாம் அவர் வில்லி ப்ரூயிட்டுக்காக செய்தார்“ என்றான். (அது அவனுடைய பெயர்). கப்பல் தலைவன், ''அது எனக்குப் பிடிக்கிறது. என் பெயரை அதில் பொருத்தி படிப்பாயா?“ என்று கேட்டான். சிறுவன், “நான் முயற்சி செய்கிறேன்” என்று கூறிவிட்டு, “ஜான் க்வார்ட்ஸின் மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, ஜான் க்வார்ட்ஸின் அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். அவருடைய தழும்புகளால் ஜான் க்வார்ட்ஸ் குணமானான்” என்று படித்தான். அவன், ''அதை நான் காண்கிறேன்'' என்றான். கர்த்தர் அவனை குணமாக்கினார். பாருங்கள், உங்கள் பெயரை அதில் பொருத்தி படியுங்கள். வில்லியம் பிரான்ஹாமின் மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, வில்லியம் பிரான்ஹாமின் அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். அவர் எனக்காக அதை செய்தார். அவர் உனக்காக அதை செய்தார். உங்கள் பெயரை அதில் பொருத்தி படியுங்கள். 37அப்படித்தான் வேத வாக்கியங்களை என் ஜனங்களிடம் நான் கொண்டு வர விரும்புகிறேன். அவர் தமக்கு கீழ்படிந்த மற்றவர்களுக்கு என்ன செய்தார், நோக்கத்துக்காக உண்மையாயிருந்த மற்றவர்களுக்கு அவர் என்ன செய்தார். நோக்கத்துக்காக உண்மையாயிராத மற்றவர்களுக்கு அவர் என்ன செய்தார் என்று கண்டு கொண்டு, உங்கள் பெயரை அதில் பொருத்தி படியுங்கள். நீங்கள் அங்கிருக்க நேர்ந்தால், எந்த நிலையை கடைபிடித்திருப்பீர்கள்? ஞாபகம் கொள்ளுங்கள், அதே நிலையை இன்றைக்கும் கடைபிடிக்க நீங்கள் சிலாக்கியம் பெற்றிருக்கிறீர்கள். 38நோவாவுக்கு தேவன் அவனிடம் உரைத்த வார்த்தையினிமித்தம் நிந்தை உண்டானது - நோவாவுக்கு நிந்தை வந்தது. அவன் விஞ்ஞானம் வளர்ந்திருந்த காலத்தில் வாழ்ந்தான். அவர்கள் விஞ்ஞானத்தில் பல சாதனைகள் புரிந்து இன்றைக்கு நாம் உருவாக்கியுள்ளவைகளைக் காட்டிலும் மிகச் சிறந்தவைகளை அவர்கள் உருவாக்கியிருந்தனர். அவர்கள் அதிக கெட்டிக்காரர்கள், அதிக அறிவு படைத்தவர்கள். அவர்களுடைய விஞ்ஞானம் நம்முடைய விஞ்ஞானத்தைக் காட்டிலும் மேம்பட்டதாயிருந்தது... அவன் 120 ஆண்டுகளாக பரியாசக்காரர் மத்தியில் பிரசங்கித்து, வார்த்தையின் நிமித்தம் உண்டான நிந்தையை சகிக்க வேண்டியதாயிருந்தது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்களுடைய மகத்தான விஞ்ஞான முறைகள், வானத்தில் மழை இல்லை என்பதை நிரூபித்தன. இருப்பினும் மழை பெய்யும் என்றுரைத்த கர்த்தருடைய வார்த்தையை நோவா கேட்டான். அது அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கு முரணாக அமைந்திருந்தது. 39எனவே அவனுடைய உயிர் காக்கப்படுவதற்கு முன்பு அவன் விசுவாசத்தில் நிலைநின்று பரியாசக்காரர் நிந்தித்த நிந்தையை சகிக்க வேண்டியதாயிருந்தது. ஓ, அவர்கள் அந்த வயோதிப் பிரசங்கிக்காக பரிதாபப்பட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் அவனை மனநிலை மருத்துவமனையில் சேர்க்கவில்லை. ஒருக்கால் அப்படிப்பட்ட மருத்துவமனைகள் அக்காலத்தில் இருந்திருக்காது. அவன் யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை. எனவே, அவர்கள் அவனை சும்மாவிட்டுவிட்டனர். தண்ணீரில்லாத போது மலைச்சரிவில் பேழையை உண்டாக்கிக் கொண்டிருக்கும் கிழப் பைத்தியக்காரனே, 'நீ செய்து கொண்டேயிரு. பாவம் அந்த கிழவன்' என்று சொல்லியிருப்பார்கள். அவர்கள், நோவாவே, பேழையை மிதக்க விட உனக்கு தண்ணீர் எங்கே கிடைக்கப் போகிறது என்றார்கள். ''அது வானத்திலிருந்து வரும்.“ “முட்டாள்தனம், நாங்கள் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் ராக்கெட்டை அனுப்பிப் பார்த்தோம்” (அந்த காலத்தில் என்ன இருந்ததோ) ''அது அங்கு தண்ணீர் இல்லவே இல்லை.“ ஆனால், ''தேவன் அங்கு தண்ணீரை வைக்கப் போவதாக கூறினார்“. ''அவரால் எப்படி அதை செய்ய முடியும்?“ “அது அவருடைய பொறுப்பு. நான் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, இங்கிருந்து போய்விட உங்களை எச்சரிப்பதே''. இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. ''அக்கினி எங்கிருந்து வரப் போகிறது?“ சகோதரனே, நோவாவின் காலத்தில் இருந்ததை விட இன்றைக்கு அது சற்று அதிகம் வெளிப்படையாயுள்ளது. அது எங்குள்ளதென்று நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். அது தாக்க ஆயத்தமாயுள்ளது. அவ்வளவுதான். விஞ்ஞானம் ஏற்கனவே... இந்த முறை சாக்கு போக்குக்கு இடமேயில்லை, ஏனெனில் விஞ்ஞானம் அதை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. ஆம். ஐயா. 40எனவே அது கடினமானது என்று நாம் காண்கிறோம். அவர்கள் அந்தக் கிழப் பிரசங்கிக்காக பரிதாபப்பட்டு, அவனை போகவிட்டனர். அந்த மனிதனின் செயல்கள் அந்த ஜனங்களுக்கு விபரீதமாக காணப்பட்டிருக்கக் கூடும்... (ஒலிநாடாவில் தடங்கல் - ஆசி). வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவன். அவர்களுடைய கருத்துக்கு முரணான ஒன்றை கூறுவார் அல்லது செய்வார் என்பது அவர்களுக்கு வினோதமாக தென்பட்டது. அவர்களிடமிருந்த... நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன். கவனியுங்கள். இயற்கையிலுள்ள ஒவ்வொன்றையும் தங்கள் விஞ்ஞானத்தின் மூலம் நிரூபிக்க முடியும் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமும் அதே மனப்பான்மையைக் கொண்டுள்ளது அல்லவா? அறிவுத்திறன், கல்வியறிவு படைத்த... விஞ்ஞானம் நிறைந்த உலகம். அவர்களால் ஒன்றை தவறென்று நிரூபிக்க முடிந்தால்... தேவன் உரைத்த ஏதாவதொன்றை... அது அங்கில்லை என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியும் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். 41இன்றைக்கும் அவர்கள் அதே கருத்தைக் கொண்டுள்ளனர். உங்களுக்கு புற்று நோய் உள்ளதென்றும் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்றும் மருத்துவர் உங்களிடம் கூறினால், உங்களுக்குள்ள புற்று நோய் அதிகப்படியாக வளர்ந்த கட்டத்தை அடைந்துவிட்டது என்றும் விஞ்ஞானம் நிரூபிக்குமானால், அதைக் காட்டிலும் வித்தியாசமாக நினைப்பது மூடத்தனம். ஏனெனில் நீங்கள் இறந்தே ஆக வேண்டும். அவ்வளவுதான் என்று ஜனங்கள் கருதுகின்றனர். நீங்கள் இறக்க வேண்டுமென்று விஞ்ஞானம் கூறுகிறது. அவர்கள் உங்களைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு தீர்மானம் செய்துவிட்டனர், அவ்வளவுதான். நீங்கள் இறந்தே ஆக வேண்டும். தேவன் அதை குணமாக்குவதாக வாக்களித்துள்ளார் என்று நீங்கள் கூற முற்பட்டால், உங்களைப் பைத்தியக்காரர் என்று அவர்கள் கருதுகின்றனர். பாருங்கள், முன்காலத்தவரைப் போலவே, நீங்களும் நிந்தையை சகிக்க வேண்டும். மருத்துவர் உங்களை பரிசோதித்துவிட்டு, “நாங்கள் உள்ளே பார்த்தோம். புற்று நோய் அதிகம் வளர்ந்துவிட்டது. நாங்கள் அறுத்து பார்த்தோம். புற்று நோய் உங்கள் உடல் பூராவும் பரவி. உங்கள் இருதயம், நுரையீரல், ஈரல், மற்றும் எல்லா உறுப்புகளையும் பாதித்துவிட்டது. இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது” என்கிறார். பாருங்கள், ''அவர் எப்படியானாலும் உயிர் வாழ்வார்'' என்று நீங்கள் கூறினால், அவர்கள் பாவம், ''ஏழை மனிதன், அவரை சும்மா விட்டு விடுங்கள்“ என்கின்றனர். 42அன்றொரு இரவு, மில்டவுன் சபையைச் சார்ந்த பில் ஹாலுக்கு நேர்ந்தது என் நினைவுக்கு வருகிறது. உங்களில் அநேகருக்கு அது ஞாபகமிருக்கும். அவர்கள் என்னை அழைத்தபோது நானும், என் மனைவியும், மாமியாரும் அங்கு சென்றோம். அவர் இங்கு நகரத் தலைவர். இல்லை, நீதிபதியாயுள்ள ஜார்ஜ் காப் என்பவரின் சகோதரியை மணந்தவர். எனவே அவர் அவருக்கு மைத்துனர். அவர் மரித்துவிடுவாரென்று நினைத்து அவரை இங்கு கொண்டு வந்தனர். மில் டவுனிலுள்ள மருத்துவர், நியூ ஆல்பனியிலுள்ள மருத்துவர் அவரைப் பரிசோதித்து, அது ஈரல் புற்று நோய் என்று கண்டுபிடித்தனர். நான் திருமதி ஹாலைக் காணச் சென்றேன். அவருக்கு மஞ்சள் காமாலை கண்டு, உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக இருந்தது. நான், ''அவர் மரிக்கப் போகிறார் என்று நினைக்கிறேன்“ என்றேன். அவள், “சகோ. பில், அவரைக் காப்பாற்ற வழி ஏதாகிலும் உண்டா... தேவன் உங்களிடம் பேசுவாரா''? என்றாள். நான், “சகோதரி ஹால், எனக்குத் தெரியவில்லை. நான் ஜெபிக்கிறேன்” என்று கூறிவிட்டு, ஜெபித்து விட்டு வீடு திரும்பினேன். தேவன் என்னிடம் ஒன்றுமே கூறவில்லை. அடுத்த நாள் நான் மறுபடியும் அங்கு சென்று, மறுபடியும் ஜெபித்தேன். அவள், “உங்களுக்கு நல்ல மருத்துவர் யாராகிலும் தெரியுமா''? என்று கேட்டாள். நான், ''டாக்டர் சாம் அடேயர் என்னும் எங்கள் குடும்ப மருத்துவர் ஜெபர்ஸன்வில்லில் குடியிருக்கிறார். அவருடைய தந்தை எங்கள் குடும்ப மருத்துவர். அவருடைய மகன் சாம் எனக்கு நெருங்கிய நண்பர். நாங்கள் ஒன்றாக பள்ளிக்கு சென்று ஒன்றாக வளர்ந்தோம். எங்களுக்கு உடல் நிலை சரியில்லையென்றால், அவரிடம் தான் போவோம்“ என்றேன். அவள், ''அவர் வந்து பில் ஹாலைப் பார்ப்பாரா என்று கேட்டாள் (அது அவளுடைய கணவர்). ''அவரைக் கேட்டு பார்க்கிறேன்“ என்றேன். 43சாம் என்னிடம், ''பில்லி, அவருக்கு புற்று நோய் உள்ளதாக மருத்துவர் கூறியிருந்தால், நான் செய்யக் கூடிய ஒன்றே ஒன்று, என்னைக் காட்டிலும் அதிகம் அறிந்த நிபுணரிடம் அவரை அனுப்பி, எக்ஸ்ரே படங்களை எடுப்பதே. அவரை அதிக தொல்லைக்குட்படுத்த வேண்டாம்“ என்றார். எக்ஸ்ரே படங்களை எடுக்க நாங்கள் அவரை நியூ ஆல்பனிக்கு அனுப்பினோம். அவரை மருத்துவப் பரிசோதனைக்காக லூயிவில்லுக்கு கொண்டு சென்றோம். அவரை நோயாளி ஊர்தியில் கொண்டு சென்று திரும்பக் கொண்டு வந்தோம். சாம் திருமதி ஹாலிடம் அவருடைய உடல் நிலையைப் பற்றி கூறவில்லை. அவர் என்னை அழைத்து, அவர் மரிக்கப் போகிறார். நீர் அவருடைய போதகர் நண்பர். லூயிவிலிலுள்ள மருத்துவ நிபுணர் என்னை இப்பொழுது தான் தொலைபேசியில் கூப்பிட்டு, மில்டவுன் மருத்துவர்களின் கண்டு பிடிப்பும், நியூ ஆல்பனி மருத்துவரின் கண்டுபிடிப்பும் சரியே. அது ஈரல் புற்ற நோய் தான். அது அதிகப்படியாக வளர்ந்துவிட்டது என்று கூறினார். பில்லி, ஈரலை நாம் அறுத்து எடுத்துவிட்டால் அவர் உயிர் வாழ முடியாது. அவர் எப்படியும் மரித்துவிடுவார். அவர் பிரசங்கியானால், மரிக்க ஆயத்தமாயிருக்க வேண்டும்“ என்று கூறிவிட்டார். 44அப்பொழுது நான் அவரிடம், அதுவல்ல பிரச்சினை. அவருக்கு ஏறக்குறைய ஐம்பத்தைந்து வயது தான் ஆகிறது. எனவே பிரசங்கிக்க அவருக்கு ஆயுசு நாட்கள் இன்னும் அதிகம் உள்ளனவே. சரி, அவர் இறக்க வேண்டும் என்றால், அத்துடன் அது முடிவு பெறுகிறது. நன்றி, ''டாக்டர் சாம்“ என்று கூறி விடைபெற்றேன். நான் சென்று திருமதி ஹாலிடம் , ''லூயிவில்லில் அவர்கள் கண்டுபிடித்ததும், நியூ ஆல்பனியிலும் மில்டவுனிலும் அவர்கள் கண்டு பிடித்ததும் ஒன்றே தான். சகோ. ஹால் மரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஈரலில் புற்று நோய் உள்ளது. அது முதிர்ந்துவிட்டது'' என்றேன். அவள் அழ ஆரம்பித்தாள். நான் திரும்பி அவருக்காக ஜெபம் செய்தேன். நான் அறையில் இருந்தது கூட அறியக் கூடாத அளவுக்கு அவர் அவ்வளவு மோசமான நிலையில் இருந்தார். நான் திரும்பி வந்துவிட்டேன். அந்நாட்களில் அநேகர் என் வீட்டுக்கு வருவது வழக்கம். வேறு யாரும் ஊழியத்தில் இல்லை. அது அவ்வளவாக கறைப்பட்டிருக்கவில்லை. ஜனங்கள் எல்லாவிடங்களிலிருந்தும் வருவார்கள். 45நான் சிறிது இளைப்பாற எண்ணி மெல்ல நழுவிச் சென்று விடியற்காலை 2.30 அல்லது 3.00 மணிக்கு எழுந்துவிட்டேன். சகோ. உட் அப்பொழுது, அந்த சந்துக்கு குடி வரவில்லை. நான் நெடுஞ்சாலையை நோக்கின போது யாரும் அங்கில்லை. எனவே நான் என் பழைய தொப்பியை எடுத்துக்கொண்டு, குகை அறைக்குள் சென்று என் 22 துப்பாக்கியை கையிலெடுத்து அணில் வேட்டைக்குச் செல்லலாமென்றிருந்தேன். 8.00 மணி வரைக்கும் வேட்டையாடிவிட்டு ஏதாவதொரு மரத்தின் நிழலில் படுத்து சிறிது உறங்கலாமென்று எண்ணினேன். வீட்டில்... தூக்கம் வரவில்லை. நான் தொப்பியை எடுத்துக் கொண்டு குகை அறையை நோக்கி புறப்பட்ட போது, சுவற்றில் ஒரு ஆப்பிள் பழம் தொங்கிக் கொண்டிருந்தது. அது முழுவதும் அழுகிப்போய் புழுவால் அரிக்கப்பட்டு, முடிச்சு முடிச்சாய் இருந்தது. மேலெல்லாம் சுருக்கம் விழுந்திருந்தது. ''மேடா ஏன் அதை சுவற்றில் தொங்கவிட்டாள்?“ என்று நினைத்தேன். நான் மறுபடியும் கவனித்தபோது, அது சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கவில்லை, அந்தரத்தில், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. என் தொப்பியைக் கழற்றி மூலையில் சென்று முழங்கால்படியிட்டு, ''கர்த்தாவே, உமது தாசன் என்ன அறிந்து கொள்ள வேண்டுமென்று சித்தங்கொள்கிறீர்''? என்று கேட்டேன். 46வேறொரு ஆப்பிள் பழம் கீழே இறங்கினது, வேறொரு ஆப்பிள் பழம் கீழே இறங்கினது. இப்படியாக நான்கைந்து ஆப்பிள் பழங்கள் தொங்கின (எத்தனை என்று இப்பொழுது ஞாபகமில்லை). பிறகு ஒரு அழகான கோடுகள் உள்ள ஆப்பிள் கீழே இறங்கி வந்து அழுகிப் போன ஆப்பிள் பழங்கள் அனைத்தையும் விழுங்கினது. அவர், ''எழுந்து காலூன்றி நில். நீ போய் பில் ஹாலிடம், அவர் மரிப்பதில்லை. அவர் உயிரோடிருப்பார் என்று சொல்“ என்றார். ஓ, என்னால் முடிந்தவரை நான் வேகமாக ஓடிச்சென்று, “திருமதி ஹால், எனக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பது கிடைத்துவிட்டது. அவர் உயிர் வாழப் போகின்றார்” என்றேன். பில் ஹால் அதைக் கேட்டு அழத் தொடங்கினார். அவரால் பேச முடியவில்லை. நான் திரும்பி வந்து சாமை தொலைபேசியில் கூப்பிட்டு, “சாம், நம் சகோதரன் உயிர் வாழப்போகிறார்” என்றேன். அவர், ''அது எப்படி முடியும்?“ என்றார். ''நான் அதை கணக்கிட வேண்டியது என் பொறுப்பல்ல. தேவன் அவ்வாறு உரைத்தார். அது அதை முடிவுப்படுத்துகிறது“ என்றேன். இன்றைக்கும் அவர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அது பத்து ஆண்டுகளுக்கு முன்பு. இப்பொழுது அவர் பெலமுள்ளவராகவும் ஆரோக்கியமுள்ளவராகவும் இருக்கிறார். அவருடைய மனைவி மரித்துப் போனாள். அவர் மறுமணம் புரிந்து கொண்டார். அது எப்படி ஜார்ஜ் ரைட்டுக்கும் இன்னும் நாம் அழைக்கும் மற்றவர்களுக்கும் நடக்கும்? அது என்ன? அது நிந்தையைச் சகிப்பது. அவர்கள் நகைத்து கேலி செய்கின்றனர். 471937-ம் ஆண்டின் வெள்ளத்துக்கு முன்பு நான் நிர்வாகத்தினரிடம், ஸ்பிரிங் தெருவில் முப்பத்திரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கும் என்று உரைத்தது என் நினைவுக்கு வருகிறது. அவர்கள் என்னைப் பார்த்து சிரித்து, “பாவம் பில்லி, நான் நினைக்கிநேன் அவன்... அந்த பையன்...” என்றனர் (அப்பொழுது நான் ஒரு இளைஞன்) அவர், ''பில்லி நல்ல பையன் தான். ஆனால் அவன் குழப்பமடைந்துள்ளது அவமானமே“ என்றார். நான் குழப்பமடையவில்லை, நான் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டேன், குழப்பமடையவில்லை. நான் அப்பொழுது தான் உள்ளே நுழைந்த சமயம் அது. நான் உரைத்தபடியே நிறைவேறிற்று. நான் பேசத் தொடங்கின முதற்கு, சகோதரி ஹாட்டி ரைட் பின்னால் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். பில்லி ஹாலைக் குறித்த விஷயம் அவர்களுக்குத் தெரியும். அந்த விஷயம் இன்று காலை இங்குள்ள எத்தனை பேருக்குத் தெரியும்? ஓ, என்னே! நிச்சயமாக. உங்களில் பலருக்கு தெரிந்திருக்கிறது. 48அவர்கள் நமக்காக பரிதபிக்கின்றனர். பரியாசக்காரர். தங்கள் நாட்களில் வார்த்தையில் நிலைநிற்க முனையும் எவருக்காகவும் பரிதபிக்கின்றனர். ஆனால் ஞாபகங் கொள்ளுங்கள். நிந்தை வந்தாக வேண்டும். அது எக்காலத்தும் அவ்வாறு இருந்து வந்துள்ளது. முற்காலத்தவரைப் போலவே இவர்களும் (ஒன்று விஞ்ஞான ரீதியாய் நிரூபிக்கப்பட்ட பிறகு), தேவன் விஞ்ஞானத்துக்கு விரோதமாய் பேசமாட்டார் என்று எண்ணியிருக்கக் கூடும். ஆனால் அது தான் அவரை தேவனாக்குகிறது! அவர் விஞ்ஞானத்தின் போக்கிலேயே சென்றிருந்தால், அது மனிதனின் சாதனையைக் காட்டிலும் வித்தியாசமாக இராது. ஆனால் அவர் தேவன்! அவர் விஞ்ஞானத்தை சிருஷ்டித்தவர். அவருடைய விருப்பப்படி அவரால் செய்யக் கூடும். அவர்கள், ''பாவம் நோவா! அந்த கிழவனை தனியே விட்டு விடுங்கள். இந்நாட்களில் நமக்குக் கிடைக்கப்பெறும் எல்லாவிதமான குதூகலத்தையும் அவர் இழக்கின்றார். அவரைத் தனியே விட்டு விடுங்கள்“ என்று சொல்லியிருப்பார்கள். இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. 49இப்பொழுது வேறொன்றை இங்கு கூற விரும்புகிறேன். நாம் முன்னால் நடந்தவைகளை நோக்கி அவனுடைய விசுவாசத்தை பாராட்டுகிறோம். அவனுடைய காலத்தில் நாம் வாழ்திருந்தோமானால் நோவா கொண்டிருந்த நிலையையே நாமும் கொண்டிருப்போமோ என்று வியக்கிறேன். சத்தியத்துடன் சம்பந்தப்பட்டுள்ள நிந்தையை நாம் சகிக்க சித்தம் கொண்டிருப்போமோ, அதை சகித்திருப்போமோ? அக்காலத்தில் உலகில் இருந்த லட்சக்கணக்கானவரில், நோவாவும் அவனுடைய குடும்பத்தினரும் மாத்திரமே அந்த சத்தியத்துக்காக நின்றனர். அதை சிந்தித்துப் பார்த்தீர்களா? அந்த மனிதனும் அவனுடைய மூன்று குமாரரும், அவனுடைய மருமக்களும், அவனுடைய மனைவியும் மாத்திரமே அந்த சத்தியத்துக்காக நின்றனர், ஆனால் அவர்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருந்தனர். நாம் பின் நோக்கி அவனைப் பாராட்டுகிறோம். நாம் மற்றொரு சம்பவத்தை சிந்தித்துப் பார்ப்போமா? (பிள்ளைகளுக்கு வெகுமதிகள் அளிக்க விருப்பதினால் நான் வேகமாக முடிக்க வேண்டும்). ஆபிரகாம் - ஆபிரகாம் என்னும் சொல் அநேகருக்கு தகப்பன் என்று பொருள்படும். அவன் அநேக ஜாதிகளுக்கு தகப்பனானான். ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்டான். அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் தேவனுடைய வார்த்தையைக் கேட்டான். அவன் தேவனுடைய வார்த்தையை இறுகப் பிடித்துக் கொண்டதற்காக அவனை நாம் பாராட்டுகிறோம். அவன் தன்னுடைய ஜனங்களிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டான். அது ஆபிரகாமுக்கு எவ்வளவு கடினமாய் இருந்திருக்கும்! அவன் அங்கு வளர்க்கப்பட்டான். அவன் பாபேலிலிருந்து புறப்பட்டு வந்து சிநெயார் தேசத்தில் குடி புகுந்தான். அவன் ஊர் என்னும் கல்தேயருடைய பட்டினத்திலிருந்து வந்தான். அங்கு அவனுடைய கூட்டாளிகளும், அவனுடைய ஜனத்தாரும், அவனுடன் சபைக்குச் சென்றவர்களும் இருந்தனர். 50தேவன், ''பிரிந்து வா“ என்றார். ஓ, என்னே! அவனுக்கு அருமையாயிருந்தவர்களையும் உண்மையாயிருந்தவர்களையும் விட்டுப் பிரிந்து வருவது எவ்வளவு மோசமான செயல்! தேவன் அவனிடம், ''அவர்களை விட்டுப் புறப்பட்டு வா“ என்றார். அவர் விசித்திரமான ஒன்றை அவனிடம் கூறினார். அதாவது அவனுக்கு எழுபத்தைந்து வயதும் அவளுக்கு அறுபத்தைந்து வயதும் ஆன போது, அவர் அவனிடம், ”உனக்கு உன் மனைவியின் மூலம் ஒரு குழந்தை பிறக்கும்“ என்றார். அவளுக்கு அநேக ஆண்டுகளாக ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நின்று போயிருந்தது. அவள் சிறுமியாயிருந்த முதற்கொண்டு அவன் அவளுடன் வாழ்க்கைப்பட்டிருந்தான் (ஏனெனில் அவள் அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரி). அப்படியிருக்க அவன் மூலமாய் அவளுக்கு எப்படி பிள்ளை உண்டாகும்? ஆபிரகாம் தன் கூட்டாளிகளிடம் சென்று, ''சாராளுக்கும் எனக்கும் குழந்தை பிறக்கப் போகிறது“ என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஜனங்கள், ''பாவம் கிழவன். அவனுக்கு மூளை கோளாறு ஏற்பட்டுள்ளது“ என்று சொல்லியிருப்பார்கள். அது ஒரு நிந்தை. ஆனால் ஆபிரகாமோ தேவனுடைய வாக்குத்தத்தத்தில் நிலைநின்றான். அவன் 100 வயதுள்ளவனாயிருக்கும்போது. அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படாமல் முழு நிச்சயமாய் நம்பினான். அவன் அப்பொழுதும் அதில் நிலைநின்று நிந்தையைத் தாங்கினான். 51அங்கு வித்தியாசத்தை கவனித்தீர்களா? சாராள் ஆபிரகாமுக்கு, இல்லை தேவனுக்கு, சிறு உதவி செய்ய எண்ணினாள். அவள் மனதில் என்ன நினைத்தாள் என்று உங்களுக்குத் தெரியும்... தேவனுடைய வாக்குத்தத்தத்துக்கு மாறாக அவள் செயல்பட எண்ணினாள். அவள், “நான் கிழவியாகிவிட்டேன். இங்குள்ள ஆகார் அழகுள்ள பெண். அவளை மணந்து கொள்ள ஆபிரகாமும் மறுக்கமாட்டார். அது தேவனுக்கு உதவி செய்யும். அவளுக்கு 20 வயதுதான் ஆகிறது. அவள் என் அடிமைப்பெண். நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? என் கணவருக்கு அவளை மனைவியாக கொடுப்பேன் (பல பெண்களை மணத்தல் அக்காலத்தில் சட்டபூர்வமானது). அவளுக்கு என் கணவர் மூலம் குழந்தை பிறக்கும். அந்த குழந்தையை நான் எடுத்து வளர்த்து அதை தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையாக கருதுவேன்” என்று மனதில் எண்ணினாள். பாருங்கள், நாம் எப்பொழுதுமே ஏதோ ஒன்றை செய்ய முயல்கிறோம். அவருக்காக நம்மால் காத்திருக்க முடியவில்லை. நாமே ஏதாவதொன்றை செய்ய வேண்டும். அது ஒருக்கால் சரியாயிருக்கலாம். ஆகார் அழகுள்ள பெண்ணாய் இருந்திருக்கலாம். அது நல்லதாக தென்பட்டிருக்கக் கூடும். ஆனால், அது தேவனுடைய வார்த்தையின்படி அமையவில்லை. சாராளின் மூலம் குழந்தை பிறக்கும் என்று தான் தேவன் ஆபிரகாமிடம் கூறினார். அவர் சிறு மந்தையைக் குறித்து என்ன கூறினாரென்பதை ஞாபகம் கொள்ளுங்கள், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். நோவாவின் காலத்தில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். அக்காலத்தில் சில பேர் - எட்டு பேர் - மாத்திரமே இரட்சிக்கப்பட்டார்கள்” இந்த வார்த்தைகள் ஒருபோதும் தவறாது. எனவே நாம் விழித்திருந்து வார்த்தையில் நிலைநிற்போம். 52சரி, பாருங்கள், தேவனுடைய சிருஷ்டிப்பின் சித்தத்தின் இடத்தை எடுத்துக்கொள்ள, ஜனங்கள் எப்பொழுதுமே ஏதாவதொன்றை உற்பத்தி செய்ய முயல்கின்றனர். பாருங்கள், நான் அடிக்கடி கூறுவது போன்று - இதை இந்த சபையில் இதற்கு முன்பே கூறியிருக்கிறேன் - நீங்கள் செம்மறியாட்டிடம், “எனக்கு சிறிது கம்பளி உரோமம் உற்பத்தி செய்து தருகிறாயா?” என்று கேட்க வேண்டிய அவசியமில்லை. அது செம்மறியாடாக இருப்பதால், உரோமம் தானாகவே வளருகிறது. வெள்ளாடு கம்பளி உரோமத்தை தன்னில் உற்பத்தி செய்ய முடியாது. ஏனெனில் அதன் சுபாவம் அதை அனுமதிக்காது. நீங்கள் எவ்வளவு தான் செம்மறியாட்டு கம்பளி உரோமத்தை ஒரு வெள்ளாட்டில் கட்ட முயன்றாலும் அது கிரியை செய்யாது. வெள்ளாடு கம்பளி உரோமத்தை உற்பத்தி செய்ய முடியாது. செம்மறியாடும் சாதாரண மயிரை உற்பத்தி செய்ய முடியாது. அது செம்மறியாடாக இருப்பதால் கம்பளி உரோமத்தை பெற்றுள்ளது. அதை உற்பத்தி செய்வதில்லை. நாமும் கூட ஆவியின் கனிகளை உற்பத்தி செய்வதில்லை. அவைகளை நாம் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆப்பிள் மரம் ஆப்பிள் பழங்களை உற்பத்தி செய்வதில்லை, அது ஆப்பிள் பழங்களைக் கொடுக்கிறது. நாமும் ஏதாவதொன்றை உற்பத்தி செய்ய முனைந்து, “அது அந்த நோக்கத்துக்கு உதவியாயிருக்கும். நான் வேதாகமப் பள்ளியில் பத்து ஆண்டுகள் படிக்கப் பேகின்றேன். நான், இதை, அதை, மற்றதை படித்து வேத சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்று, கர்த்தருக்கு உதவி செய்யப் போகின்றேன்” என்கிறோம். அது கிரியை செய்யாது. தேவன், முன்குறித்தலின் மூலம், தமக்கு சித்தமானவர்களை அழைக்கிறார். 53அவர் யாருக்கு தமது ராஜ்யத்தை அளிக்க விரும்புகிறாரோ, அவருக்கு அதை அளிக்கிறார். அதை நாம் நெபுகாத்நேச்சார் வரலாற்றின் மூலம் அறிந்து கொண்டோம். அதை நாம் எரேமியாவின் மூலம் அறிந்து கொண்டோம். கர்த்தருடைய வார்த்தை அவனுக்குண்டாகி, இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனுக்கு சிறை பிடித்துக் கொண்டு போகப்பட்டு அங்கு ஏழு ஆண்டுகள் தங்க வேண்டிய காலம் வரும் என்றுரைத்தது. வேறொரு தீர்க்கதரிசி அங்கு வருகிறான். அவர் ஏற்கனவே எரேமியாவிடம், “உங்கள் மத்தியில் தீர்க்கதரிசிகள் பாபிலோனில் எழும்புவார்கள். இதற்கு முரணாக தீர்க்கதரிசனம் உரைக்கும் தீர்க்கதரிசிகளும் சொப்பனக்காரர்களும் எழும்புவார்கள். அவர்களுக்கு செவி கொடுக்க வேண்டாம் என்று ஜனங்களிடம் சொல் என்று கூறியிருந்தார். எரேமியா நுகத்தை தன் கழுத்தின் மேல் போட்டுக் கொண்டு அங்கு நின்று கொண்டிருந்தபோது, அனனியா என்னும் பெயர் கொண்ட ஒருவன் (தீர்க்கதரிசிகளில் ஒருவன்) அங்கு வருகிறான். அவன், ''கர்த்தர் உரைக்கிறதாவது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் கர்த்தருடைய பாத்திரங்கள் - அடிப்படையில் அது மிகவும் நல்லதாக தோன்றினது - தேவன் தமது ஜனங்களை ஆசீர்வதிக்கப் போகிறார். அவர்களை சரியாக இன்னும் இரண்டே ஆண்டுகளில் திரும்பக் கொண்டு வந்துவிடுவார்“ என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். எரேமியாவும் கூட அதற்கு ”ஆமென்“ என்று உரைத்தாக வேதம் கூறுகிறது. “ஆமென், அனனியா, கர்த்தர் உன் வார்த்தையை நிறைவேறப் பண்ணுவாராக. ஆனால் நாம் வேறொன்றை நினைத்துப் பார்ப்போம், அனனியா. நமக்கு முன்பு தீர்க்கதரிசிகள் தோன்றி ராஜ்யங்களுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைத்தனர். ஆனால் ஒருவனுடைய தீர்க்கதரிசனம் நிறைவேறுவதன் மூலமே அவன் தீர்க்கதரிசியென்று அறியப்படுகிறான்.” 54பிறகு அனனியா அங்கு வந்து. சபையிலிருந்த (ஒருக்கால் பதினைந்து லட்சம் பேர் இருந்திருக்கக் கூடும்) ஆசாரியர்களுக்கு முன்பாக, ''தேவன் எரேமியாவின் கழுத்தில் ஒரு அடையாளத்துக்காக போட்டிருந்த நுகத்தை எடுத்து உடைத்து அவன் கால்களின் கீழ் எறிந்து வெறும் உற்சாகம் மேலிட்டவனாய்... கர்த்தர் உரைக்கிறதாவது, இரண்டு ஆண்டுகளில் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்“ என்றான். எரேமியா அவனை உற்று நோக்கினான். அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருந்தபடியால், அவன் அங்கிருந்து நடந்து சென்றுவிட்டான். கர்த்தர் அவனிடம் “நீ திரும்பிப் போய் நான் அவனிடம் பேசவில்லை என்று சொல்” என்றார். அவனுக்கு வெறும் உற்சாகம் தோன்றினது. அவன் தன்னுடைய சொந்த கருத்தை எடுத்துக் கொண்டான். பாருங்கள்? அது அவனல்ல. அது தேவன் உரைக்கிறதாவது என்று உறுதிகொள்ளும் வரைக்கும் அவன் காத்திருக்கவில்லை. அவன் உற்சாகம் மேலிட்டவனாய் திரும்பிச் சென்றான். 55அதே நிலையை இன்று நாட்டில் காண்கிறோம். அண்மையில் ஒரு வீட்டில் நமது ஒலிநாடா ஒன்றை போட்டு கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் கூடியிருந்த போதகர்கள் அதை கேட்டு உறுதி கொண்டவர்களாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞான்ஸ்நானம் பெறுவதற்கு வந்து கொண்டிருந்த போது, அறையிலிருந்த ஒரு மனிதன் எழுந்து அந்நிய பாஷை பேசி, “கர்த்தர் உரைக்கிறதாவது, உங்களுக்குள்ளதை பற்றிக் கொண்டு சென்று கொண்டேயிருங்கள். உங்களை நான் ஆசீர்வதிப்பேன்” என்றாராம். அவர்கள், ''கர்த்தர் அதை உரைத்தால், அது அவ்வளவு தான் என்று நினைக்கிறோம்“ என்று கூறிவிட்டார்களாம். பாருங்கள், அது தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படவில்லை. நீங்கள் வார்த்தையை தான் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பார்த்தீர்களா? அது வார்த்தைக்கு முரணாக அமைந்திருந்தது. அந்த அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசி எரேமியா இதோ வருகிறான். தேவன் அவனிடம், “உன் கழுத்தில் நான் போட்ட மர நுகத்தை அனனியா உடைத்தெறிந்தான். இப்பொழுது நான் இரும்பினால் ஒரு நுகத்தை செய்ய போகிறேன். என் தாசனாகிய நெபுகாத்நேச்சாரை சேவிக்க, அங்கு சென்றுள்ள ஜாதிகள் அனைத்தையும்... நெபுகாத்நேச்சர் ஒரு அஞ்ஞானி, இஸ்ரவேல். ஜனங்கள் எல்லா பலிகளையும் செலுத்தினர். இருப்பினும் அவர்கள்... பாருங்கள், தேவன் ஆசீர்வதிப்பதாக வாக்குத்தத்தம் செய்திருந்தார், ஆனால் அது நிபந்தனைகளுடன் கூடிய ஆசீர்வாதம். நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமானால், அந்த நிபந்தனைகளைக் கைக்கொள்ள வேண்டும். 56சற்று முன்பு இனிமையான ஒரு சிறு பெண்ணுடன் இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஏதாவது தவறுள்ளதா என்று அறிய அந்த குடும்பத்தின் காரியங்களை அலசிப்பார்த்தேன். தேவன் சுகமளிப்பார், ஆனால் அது நிபந்தனையோடு கூடியது. நான் கண்டுபிடித்த ஒரே காரியம் என்னவெனில், மருந்து உட்கொள்வது தவறென்று அந்த பெண்ணின் தாய் அபிப்பிராயம் கொண்டிருந்தாள். நான், “சகோதரியே. அப்படி நினைக்க வேண்டாம். அந்த எண்ணத்தை கைவிடு. பெண்ணுக்கு மருந்து கொடு. தேவன் அதை தெரியப் பண்ணுவார்” என்றேன். பாருங்கள். அது நல்லது தான். ஆனால், ''நான் கூறினது கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதாம். சரி. 57இப்பொழுது, ''ஆகார், சாராள் இருவரும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உண்மையாக்க தேவனுக்கு உதவி செய்ய எண்ணி ஏதோ ஒன்றை உற்பத்தி செய்ய முயன்றனர். நீங்கள் அப்படி செய்யவே கூடாது. அப்படி செய்வது முறையல்ல. அது எல்லாவற்றிற்கும் விரோதமானது. எப்படியும் தேவனுடைய வார்த்தை நிறைவேறியே தீரும். நீங்கள் வார்த்தையில் உறுதியாய் நின்று அது இப்படித்தான்“ என்று சொல்லி, அதை கைக்கொள்ள வேண்டும். இப்பொழுது கவனியுங்கள். அவருடைய வார்த்தையின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள அவர்கள் ஒன்றை உற்பத்தி செய்தனர். ஆபிரகாமின் நண்பர்களும் கூட ஒருக்கால் அவனிடம் வந்து, ''ஜாதிகளின் தகப்பனே, உனக்கு இப்பொழுது எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்? (அவன் 100 வயதாயிருக்கும் போது). ஜாதிகளின் தகப்பனே, எங்களுக்கு சொல்லும்“ என்று கேலி செய்திருப்பார்கள். பரியாசக்காரர்! 58அந்த காலத்தை நீங்கள் காண்கிறீர்களா? சில நேரங்களில் நாம் ஜெபித்து ஒன்றும் நடக்காதபோது, ''அதை நாம் கண்டிருக்கிறோம் அல்லவா? இங்கு ஒரு வயோதிபர் உட்கார்ந்து கொண்டிருந்தால், அவர்கள் அவர் குருடர், அவர் செவிடர், அவர் ஊமை, அவர் வியாதியாயிருக்கிறார். தெய்வீக சுகமளிப்பவர்களே அங்கு சென்று அவரை சுகப்படுத்துங்கள். அப்பொழுது நாங்கள் விசுவாசிப்போம்“ என்கின்றனர். ''சிலுவையிலிருந்து இறங்கி வா. அப்பொழுது நாங்கள் விசுவாசிப்போம்“ என்று சொன்ன அதே பிசாசுதான் இது என்று அவர்கள் உணருகிறார்களா? கற்கள் அப்பங்களாகும்படி செய்யும். அப்பொழுது விசுவாசிப்போம். பாருங்கள், நம்முடைய கர்த்தரின் கண்களில் துணியைக்கட்டி மறைத்து, தலையைக் கோலால் அடித்து, நீர் தீர்க்கதரிசியானால், உம்மை அடித்தது யார் என்று சொல்லும். அப்பொழுது உம்மை விசவாசிப்போம் என்று கூறினது அதே பிசாசு தான். அவரை அடித்தது யாரென்று அவருக்குத் தெரியுமென்று உங்களுக்குத் தெரியும். அவரால் கற்களை அப்பங்களாக்கியிருக்க முடியும். அல்லது சிலுவையிலிருந்து இறங்கி வந்திருக்க முடியும். அவர் அப்படி செய்திருந்தால், இன்று நம்முடைய கதி என்னவாயிருக்கும்? பாருங்கள், அவர்கள் தேவனுடைய திட்டத்தை அறியவில்லை. தேவன் எதை வாக்களித்துள்ளார் என்பதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டும். 59நான் வேகமாக முடிக்க வேண்டும். ஒருக்கால் அவர்கள் ஜாதிகளின் தகப்பனே, ''சாராளின் மூலம் உமக்கு ஒரு குழந்தை பிறக்குமென்றும் அவனிடத்திலிருந்து அநேக ஜாதிகள் தோன்றுவார்கள் என்றும் நீர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கூறக் கேட்டோம். ஜாதிகளின் தகப்பனே, இப்பொழுது உமக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்?“ என்று பரியாசம் செய்திருப்பார்கள். இன்றைக்கு குற்றம் கண்டுபிடிக்கும் அதே ஆவி தான் அது. ஆபிரகாம் என்ன செய்தான்? அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து சந்தேகப்படாமல் அதை முழு நிச்சயமாய் நம்பினான். “நீர் இன்னாருக்கு ஜெபித்தீர். அவர் சுகமடையவில்லையே” அதனால் பரவாயில்லை... இன்றிரவு நான் 10,000 பேர்களுக்கு ஜெபித்து, நாளை காலை அந்த 10,000 பேர் இறந்து போனாலும், நாளை இரவு நான் வியாதியஸ்தர்களுக்கு எண்ணெய் பூசி ஜெபம் செய்வேன். தேவன் அவ்வாறு உரைத்தார். அதை எதுவும் சிறிதளவும் நிறுத்த முடியாது. தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதை நான் விசுவாசிக்கிறேன் நிச்சயமாக. அவர்கள் என்ன சொன்னாலும் பாதகமில்லை, என்றாலும்... அவர்கள் பரியாசம் செய்வார்கள். அது வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தை. ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நின்றான். முடிவில் அது நிறைவேறினது. ஓ, என்னே! 60மலடைக் குறித்த பரியாசத்தை கவனியுங்கள். சாராள் மலடியாயிருந்தாள் , பரியாசம் செய்யப்பட்டாள். அவர் அத்தனை ஆண்டுகளாக மலடியாயிருந்ததன் நிமித்தம் நிந்தையை சகிக்க வேண்டியதாயிருந்தது (அவருக்கு ஏறக்குறைய 100 வயது; அவளுக்கு 90 வயது). ஆனால் தேவனுடைய வார்த்தை, அவள் ராஜகுமாரத்தியாக, இந்த பிள்ளையின் தாயாக இருப்பாள் என்றுரைத்தது. அவளுடைய கர்ப்பமும் ஆபிரகாமின் சரீரமும் செத்திருந்தது. இருப்பினும் அவர்கள் தேவனுடைய வார்த்தையை சிறிதளவும் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர்கள் முதலில் அந்த நிந்தையை சகிக்க வேண்டியதாயிருந்தது. அதன் பிறகு (அல்லேலூயா!) தேவன் தமது வார்த்தையை அந்த இருள் சூழ்ந்த நேரத்தில் நிறைவேற்றினார். ஈசாக்கு பிறந்தான். ஆபிரகாமின் சந்ததி கடலின் மணலைப் போலவும் வானத்து நட்சத்திரங்களைப் போலவும் பலுகினது. பாருங்கள், தேவன் எப்பொழுதும் தமது வார்த்தைக்கு உத்தரவு அளிக்கிறார். ஆம், முதலில் மலடு, பிறகு ஈசாக்கு. 61அது போன்று, சகரியாவும் எலிசபெத்தும் - அந்த வயோதிபனும் மூதாட்டியும் இன்னமும் இறுகப் பற்றிக் கொண்டிருந்தனர். சகரியர் அங்கு வந்து பலகையில் எழுதினான். அவன் ஒரு தேவதூதன் என்னை சந்தித்து எனக்கு வயது சென்ற என் மனைவி எலிசபெத்தின் மூலம் ஒரு குழந்தை பிறக்கும் என்றும், அது வரைக்கும் நான் பேச முடியாமல் ஊமையாயிருப்பேன் என்றும் கூறினான். ஒரு குமாரன் பிறக்கப் போகிறான். அவன் உன்னதமானவருடைய தீர்க்கதரிசியாயிருப்பான். அவன் விடிவெள்ளி நட்சத்திரத்தை அறிமுகம் செய்வான், அவன் மேசியாவின் முன்னோடியாயிருப்பான் என்றான். அது எப்படி முடியும்? சிலர், “பாவம் கிழவன், அவனுக்கு மூளை கோளாறு ஏற்பட்டுவிட்டதென்று நினைக்கிறேன். சிறிது ஏதோ... கிழ எலிசபெத்தைப் பாருங்கள், அவளுக்கு ஏறக்குறைய 80 வயதாகிறது. சகரியாவைப் பாருங்கள், தள்ளாடும் கிழவன். அவன் கூறுவதைப் பாருங்கள். பாவம், கிழவன்” என்று கூறியிருப்பார்கள். ஆனால் அவனோ கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டிருந்தான். அவளுக்கு வந்த நிந்தையின் நிமித்தம் அவள் தன்னை அநேக நாட்கள் மறைத்துக் கொண்டாள். அவன் தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நின்றான். ஓ, என்னே! 62அவர்கள் புகழை மறுத்து; அக்காலத்தில் பொதுவாக நிலவின க்ருத்தையும் நாகரீகத்தையும் ஏற்க மறுத்தனர். அவிசுவாசிகளுடன் கூட நடக்க அவர்கள் மறுத்தனர். அவர்கள் உலகத்தின் காரியங்களை ஏற்க மறுத்தனர். தேவனுடைய வார்த்தையில் நிற்க அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டியதாயிருந்தது. இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. உங்களுக்கும் தேவனுக்குமுள்ள தொடர்பை தவிர மற்றெல்லாவற்றையும் விட்டு விலகுங்கள், சபை என்ன செய்கிறது என்றல்ல. நீங்கள் தனிப்பட்ட நபராக தேவனுடன் என்ன செய்கிறீர்கள் என்பதே. 63ஆம், தேவன் அவனுக்கு என்ன அருளினார் என்பதை பாருங்கள். இயேசு வந்த போது, சகரியா போய்விட்டான, எலிசபெத்தும் கூட. ஆனால் அவர்களுடைய குமாரன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் வனாந்தரத்துக்குள் வந்த போது இயேசு, ''ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் எவனுமில்லை“ என்றார். ஆமென்! என்ன? மலடு என்னும் நிந்தைச் சொல்லினால் அவள் அவதியுற்றாள். அவள் வார்த்தையில் நின்று அப்படிப்பட்ட ஒரு குமாரனை பெற்றெடுத்தாள்... பழைய ஏற்பாட்டின் காலத்து சாராளைப் போல, ஆபிரகாமைப் போல. அந்த வயோதிப தம்பதிகள் வாக்குத்தத்தத்தை இறுகப்பற்றிக் கொண்டனர். இவ்வுலகிலுள்ள வேறெந்த ஜாதியுமே யூதர்களைப் போல கடலின் மணலத்தனையாகவும், வானத்து நட்சத்திரங்களைப் போலவும் இல்லை. என்ன நடந்தது?அது சிறுபான்மையில் தொடங்கினது. ஒரே பிள்ளை! (நான் எங்கு செல்கின்றேன் என்று காண முடிகிறதா?) ஒரே பிள்ளை! அவ்வளவுதான் தேவையாயிருந்தது. ஜாதிகளை அசைத்து மேசியாவைச் சுட்டிக்காட்ட ஒரே ஒரு பிள்ளை போதுமானதாயிருந்தது. கீழ்படிதலுள்ள ஒரே ஒரு பிள்ளை. அது உண்மை. தேவனுக்கு ஒரு மனிதன் மாத்திரமே அவசியம். அவ்வளவுதான் அவருக்குத் தேவை. எங்காகிலும் அவர் ஒரு சத்தத்தை பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான் அவருக்குத் தேவை. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் ஒரே ஒரு மனிதன். ஓ, ஒரு மனிதனைப் பெற அவர் எவ்வளவு ஆவல் கொண்டவராயிருக்கிறார்! 64அவர் ஒரு காலத்தில் நோவா என்னும் ஒருவனைத் தெரிந்து கொண்டார். அவர் ஒரு காலத்தில் மோசே என்னும் ஒருவனைத் தெரிந்து கொண்டார். அவர் எரேமியா என்னும் ஒருவனைத் தெரிந்து கொண்டார்; அவர் எலியா என்னும் ஒருவனைத் தெரிந்து கொண்டார்; அவர் எலிசா என்னும் ஒருவனைத் தெரிந்து கொண்டார்; அவர் யோவான் என்னும் ஒருவனைத் தெரிந்து கொண்டார். அவர் சிம்சோன் என்னும் ஒருவனைத் தெரிந்து கொண்டார். அவர் ஒரு மனிதனைத் தம்முடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும்போது, அவன் அவருடைய சத்தமாகிவிடுகிறான். அவர் அவன் மூலம் பேசி உலகத்தை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்துகிறார். ஓ, என்னே. அவர் எவ்வளவாக ஒரு மனிதனை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர பசியுள்ளவராயும் ஆவல் கொண்டவராயும் இருக்கிறார்! “அவன் மூலமாய் நான் பேசி என் சத்தத்தை அறியப் பண்ண வேண்டும். அவனுக்கு நிந்தை உண்டானாலும், ''என் சத்தத்தை அறியப் பண்ணுவேன்.” ஓ, ஆமாம். முதலில் மலடு. மலடியாயிருக்க வேண்டும். மலடி என்னும் நிந்தையை சகிக்க வேண்டும். சாராள் அதை சகிக்க வேண்டியவளாயிருந்தாள். அவ்வாறே சகரியாவும் எலிசபெத்தும் அதை சகிக்க வேண்டியவர்களாயிருந்தனர். 65இன்று பாருங்கள் - இப்பொழுது நான் ஒன்றைக் கூறப் போகிறேன் - இன்று வேசியின் பிள்ளைகளைப் பாருங்கள். வேசியும் அவளுடைய பிள்ளைகளும் எல்லா தேசங்களையும் ஸ்தாபனங்களின் அரசியல் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டனர். எப்படிப்பட்ட, ஸ்தாபனங்களின் சந்ததி எழும்பியுள்ளது என்றும், நீதிமான்கள் எவ்வளவு சொற்ப பேராய் உள்ளனர் என்பதையும் பாருங்கள். கவலைப்படாதீர்கள்! வார்த்தையில் நில்லுங்கள். நீங்கள் பரியாசம் பண்ணப்பட்டு, உருளும் பரிசுத்தர் என்று அழைக்கப்படுவீர்கள். அதனால் பரவாயில்லை. நீங்கள் எந்த மோசமான பெயராலும் அழைக்கப்படலாம்., இருப்பினும் அதில் நில்லுங்கள். அது வார்த்தை. அவர்கள் உங்களைக் குறித்து சொல்பவை வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தையாகும். 66இளைஞன் ஒருவன் - ஒருக்கால் அவன் இன்று காலை இங்கிருக்கக் கூடும். அவன் என் நண்பன் - ஜிம் பூல், இளம் ஜிம். அவனுடைய உறவினர்... அன்றொரு நாள் அவனை அவர்கள் கேட்டனர்... அவன் இங்கு ஞானஸ்நானம் பெற்றான். யாரோ ஒருவர் அவனிடம், “உனக்கு சபையில் ஞான்ஸ்நானம் பெற வேண்டுமென்று இருந்தால், நீ ஏன் ஒரு பெரிய சபையை - தெரிந்திருக்கக் கூடாது?” என்றார். பாருங்கள்? ஆனால் அவன் வெளிச்சத்தைக் கண்டான். அவ்வளவுதான். “நீதிமான்களைக் காட்டிலும் அநீதியுள்ளவர்கள் அநேகர்.” சரி, நீதியுள்ளவர்கள் எவ்வளவு சொற்ப பேர்! நோவாவின் காலத்திலிருந்த நீதிமான்கள் எவ்வளவு சொற்ப பேர் என்பதைப் பாருங்கள். சோதோமின்: நாட்களில் எப்படியிருந்ததென்று பாருங்கள். அக்காலத்தில் நீதிமான்கள் எவ்வளவு சொற்ப பேராயிருந்தனர். ஆனால் எவ்வளவு பிள்ளைகள் வேசிக்கு இருக்கிறார்கள்! அவள் பிள்ளைகளை எந்த முறையிலும் பெறுகிறாள், அவர்கள் அனைவரும் வேசியின் புத்திரரே. வேசி வேசியைப் பெறுகிறாள். நாய் நாயை ஈனுகிறது. கிறிஸ்து அபிஷேகம் பண்ணினவனைப் பெறுகிறார்! வேதாகமம் நீதிமான்களை பிறப்பிக்கிறது. எனவே நாம் சிறு கூட்டம் என்பதில் திருப்தி கொள்ள வேண்டும். அது எவ்வளவு கிருபையுள்ள காரியம்! 67அந்த பெரிய எபேசு சபையைப் பாருங்கள். அதில் பன்னிரண்டு பேர் மாத்திரமே இருந்தனர். இன்று நமக்குள்ள எண்ணிக்கையை பாருங்கள். நோவாவின் காலத்தில் எட்டு பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். லோத்தின் காலத்தில் ஐந்து பேர் - இல்லை, நான்கு பேர் மாத்திரமே - லோத்து, அவன் மனைவி, இரண்டு குமாரத்திகள். லோத்தின் மனைவி வெளியே வந்த பிறகு திரும்பிப் பார்த்து உப்புத் தூணானாள். எனவே அக்காலத்தில் உண்மையில் மூன்று பேர் மாத்திரமே வெளிவந்தனர். இயேசு, ''அந்நாட்களில் நடந்தது போல...“ என்றார். எனவே நாம் விழிப்புள்ளவர்களாய் கவனமாயிருப்பது நமது கடமையாகும். நீதிமான்கள் எவ்வளவு சொற்ப பேர்! ஆனால் எப்பொழுதும் போல பரியாசக்காரர் மலடுகளை நிந்திக்க வேண்டும்... மலடின் நிமித்தம் வரும் நிந்தையை முதலில் சகிக்க வேண்டும். (நான் வேகமாக முடிக்கவேண்டும். சிறு பிள்ளைகளை பிடித்து வைக்க நான் பிரியப்படவில்லை. என்னுடன் சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள்). 68மனிதர் என்றென்றைக்கும் ஒரே போல் இருக்கின்றனர். நான் மறுபடியும் ஒன்றை உங்களிடம் கூறப் போகிறேன். நீங்கள் அதை... இது - ஒலிப்பதிவு செய்யப்படுகின்றதா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது ஒலிப்பதிவு செய்யப்பட்டால், இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்களே, நான் சொல்வதை கவனமாய் கேளுங்கள். இதை காணத் தவறாதீர்கள் ! இதை நன்கு ஆராய்ந்து படியுங்கள். மனிதன் எப்பொழுதும் இருந்தது போலவே இப்பொழுதும் - இருக்கிறான். தேவன் ஏற்கனவே செய்ததற்காக அவன் அவரை ஸ்தோத்தரித்து, அவர் வருங்காலத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதை அவன் எதிர் நோக்கியிருக்கிறான். ஆனால் அவர் தற்பொழுது செய்து வருகிறதை அவன் அசட்டை செய்து எல்லாவற்றையும் இழந்து விடுகிறான். (அவர்கள் புரிந்து கொள்கின்றனர் என்று நினைக்கிறேன்). அவர் தற்பொழுது செய்வதை அவன் அசட்டை செய்கிறான். அவர் முன்காலத்தில் என்ன செய்தார் என்பதை அவன் அறிந்திருக்கிறான், அவர் என்ன செய்யப்போகிறார் என்று வாக்களித்துள்ளதை அவன் அறிந்திருக்கிறான். ஆனால் அவர் இக்காலத்தில் செய்வதை அவன் காணத் தவறுகிறான். ஓ, பெந்தெகோஸ்தேயினரே, நீங்களல்லவா அதற்கு உதாரணம் நீங்கள் ஏதோ ஒன்று நடக்க எதிர்ப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் அது ஏற்கனவே உங்கள் முன்னால் நடந்துவிட்டது. நீங்களோ அதை அறியாமலிருக்கிறீர்கள். கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக எத்தனை தரமோ அவர் உங்களைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தார். உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. நீங்கள் அவருடைய வார்த்தையையும் அவருடைய ஆவியையும் காட்டிலும் உங்கள் பாரம்பரியங்களுக்கும் ஸ்தாபனங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தீர்கள். 69மரியாளுக்கு அது எப்படிப்பட்ட நிந்தையாயிருந்தது... (நாம் முடிக்கப் போகிறோம்). அவருடைய வார்த்தையின் நிமித்தம் மரியாளுக்கும் யோசேப்புக்கும் எப்படிப்பட்ட நிந்தை உண்டானது! இது கிறிஸ்துமஸ் காலம் (நான் இதை குறித்து சிறிது பேசலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் நீங்கள் வானொலியின் வாயிலாகவும், உங்கள் போதகர்கள் மூலமாகவும். இதைக் குறித்து அதிகம் கேட்பீர்கள்). தேவனுடைய வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டதால் மரியாளுக்கும் யோசேப்புக்கும் எப்படிப்பட்ட நிந்தை உண்டானது! மரியாள் நடந்து சென்ற போது, அவர்கள் புருவத்தை உயர்த்தி அவளை இகழ்ந்தனர். அவர்கள் யோசேப்பை நோக்கி, “நீ ஒரு வேசியையா மணக்கப் போகிறாய்?” என்றனர். சகோதரனே, அந்நாட்களில் விபச்சாரம் செய்தவர் கொல்லப்பட வேண்டும் என்பதை ஞாபகம் கொள். அவள் கொல்லப்படக் கூடாதென்று எண்ணி உன் மூலம் அவள் தாயாகப் போகிறாள் என்று கூறுகிறாய். ஆனால் தேவனோ அவர்களுடன் ஈடுபட்டுக் கொண்டே வந்தார். அது வார்த்தையின்படி நடந்தது, அவர்களோ அதை அறியவில்லை. ஒரு கன்னிகை ஒரு குமாரனைப் பெறுவாள். யோசேப்பு அதை அறிந்திருந்தான், மரியாளும் அதை அறிந்திருந்தாள். ஏனெனில் இந்த வார்த்தை எழுதப்பட்ட பின்பு, தேவதூதன் அவர்களுக்குத் தோன்றி, எழுதப்பட்ட அந்த வார்த்தையை உறுதிப்படுத்தி, அது நிறைவேறும் என்று கூறினான். இப்பொழுது கனவு காணாதீர்கள். யோசித்துப் பாருங்கள். பரிசுத்த ஆவி பூமிக்கு இறங்கி வந்தார். அவர் சபையோர் அனைவரிடம் பேசவில்லை. அவர்களிடம் மாத்திரமே பேசினார். 70தேவ தூதன் யோசேப்பை சந்திப்பதற்கு முன்பு அவன், “நான மரியாளை நேசிக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால், நான் நீதிமான். அப்படிப்பட்ட ஒருத்தியை என்னால் மணக்க முடியாது” என்றான். கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு, “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது” என்றான். ஓ, என்னே ஒரு ஆறுதல்! மரியாள் கிணற்றுக்குப் போகும் வழியில் - பதினேழு அல்லது பதினெட்டு வயதுடைய சிறு கன்னிகை, முன்பு மணம் புரிந்து நான்கு பிள்ளைகள் இருந்த ஒரு மனிதனை - வயதில் அதிகம் மூத்தவனை - விவாகம் செய்கிறாள். அவன் அவளை நேசித்தான். ஏனென்று அவனுக்குத் ரிெயவில்லை. அவள் தண்ணீர் மொள்ள கிணற்றுக்குச் செல்லும் வழியில்... அவள் வேத வாக்கியங்களை மனதில் சிந்தனை செய்து கொண்டு சென்றாள் என்பதில் ஐயமில்லை. அப்பொழுது அவளுக்கு முன்பாக ஒரு ஒளி பிரகாசித்தது. தேவதூதன் ஒருவன் அவளுக்கு முன்பாக நின்றான். 71மரியாள், தான் எவ்வளவு சிறியவள் என்று உணர்ந்திருப்பாள்! அதைக் குறித்து நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? நேற்று நான் பயப்பட்டது போல அவளும் பயப்பட்டிருப்பாளோ என்ற வியக்கிறேன். ''மரியாளே வாழ்க“ (வாழ்க என்றால் நில்). நான் இப்பொழுது சொல்லப் போவதற்கு உன் கவனத்தை செலுத்து. ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். நீ மனிதனை அறியாதிருந்தும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய். உன் இனத்தாளாகிய எலிசபெத்தும் தன் முதிர் வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள். இந்த அடையாளங்கள் நிச்சயம் நிறைவேறும்” என்றான். அவள், ''இது எப்படியாகும்? புருஷனை அறியேனே'' என்றாள். அவன், ''பரிசுத்த ஆவி உன் மேல் நிழலிடும். உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்“ என்றான். பரியாசக்காரர் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். அது நிறைவேறும் என்பதை அவள் அறிந்து கொண்டாள் ஏனெனில் தேவன் அவ்வாறு உரைத்தார். 72பிரதிஷ்டையின் நாளின் போது, அல்லது குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய நாள் வந்த போது, அவள் குழந்தையை இப்படி கையிலேந்தி நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்பொழுது மற்ற ஸ்திரீகள் அவளிடமிருந்து விலகி தூரம் சென்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பிரதிஷ்டை செய்து விருத்தசேதனம் செய்வதற்கென அழகிய சித்திரத்தையலாடைகளால் குழந்தைகளை உடுத்தியிருந்தனர். அவர்கள் எல்லாருமே சுத்திகரிப்புக்காக ஆட்டுக்குட்டிகளை கொண்டு வந்திருந்தனர். இவளோ தன் சுத்திகரிப்புக்காக இரண்டு காட்டுப்புறாக்களை கொண்டு வந்தாள். அவள் தன் குழந்தையை காளையின் கழுத்திலிருந்த நுகத்தடியில் சுற்றப்பட்டிருந்த துணியை எடுத்து அதைக் கொண்டு சுற்றினாள்... குழந்தை தொழுவத்திலிருந்த அந்த துணியால் தான் சுற்றப்பட்டது. அவர்கள் மிகவும் தரித்திரராயிருந்தனர். எனவே அவருக்கு ஒன்றுமே இருக்கவில்லை. அதோ அவள் நின்று கொண்டிருந்தாள். 73மற்ற ஸ்திரீகள் அனைவரும் இந்த சிறு கன்னிகையை விட்டு விலகி தூரம் போய் நின்றனர் என்பதில் ஐயமில்லை. அவர்கள், “பாருங்கள், அவள் முறை தவறிப் பிறந்த குழந்தையை வைத்திருக்கிறாள்” என்றனர். தேவன் எவ்வாறு காரியங்களை தீவிரமுள்ளதாக காணப்பண்ணுகிறார் என்று பாருங்கள். அவர் சாத்தானின் கண்களை முற்றிலுமாக மறைத்து விடுகிறார். எவ்வளவு அசுத்தமானது! ''விபச்சாரம் அவள் விபச்சாரி“ என்று கூறும்படி செய்கிறார். ஆனால் அது மரியாளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவர்கள் அவளிடமிருந்து. தூரம் விலகியிருந்தனர். இன்றைக்கும் அவர்கள் அதையே செய்கின்றனர். அது யாருடைய குழந்தை என்று மரியாள் அறிந்திருந்தாள். அவள் கவலைப்படாமல் சென்று கொண்டிருந்தாள். 74ஆனால் அறையின் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த சிமியோனை அவர்கள் கவனித்திருக்க வேண்டும் அல்லவா? அவனுக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டிருந்தது. அவன், “கர்த்தர் எனக்குப் பிரத்தியட்சமாகி (அப்பொழுது அவனுக்கு எண்பது வயது) கிறிஸ்துவை அவருடைய இரட்சண்யத்தை என் கண்கள் காணுமட்டும் நான் மரணமடைய மாட்டேன் என்றுரைத்தார்” என்று தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டேயிருந்தான். “ஓ, சிமியோனே, உனக்கு வயதாகிவிட்டது. அந்த கிழவனுக்கு முளை கோளாறு ஏற்பட்டுவிட்டது. அவனை தனியே விட்டுவிடுங்கள். அவன் யாருக்கும் தீங்கு விளைவிக்கமாட்டான்” என்றனர். ஆனால் சிமியோனுக்கோ கர்த்தருடைய வார்த்தை உண்டானது. அவன், ''தேவனுடைய ஆவி என் மேல் இறங்கினதை நான் கண்டேன். நான் நின்று கொண்டு அவரைப் பார்த்தேன். அவர் என்னிடம், சிமியோனே, நீ இதுவரைக்கும் நீதிமானாய் இருந்து வந்திருக்கிறாய். நீ அதுவரைக்கும் மரிப்பதில்லை. உன்னை நான் சாட்சியாக வைக்கப் போகிறேன் என்றார்“ என்றான். “கர்த்தாவே, ஏன் அப்படி செய்யப் போகிறீர்?” அது என் சொந்த விஷயம். அந்நாளிலே அவன் அவர்கள் மேல் அக்கினித் தழலைக் குவிப்பான் என்பது என் கருத்து. “உங்களுக்கு ஒரு சாட்சி இருந்ததே! அதற்கு ஏன் செவி கொடுக்கவில்லை?” என்று அவன் கேட்பான். 75பிறகு பார்வை இழந்த அன்னாள் தேவாலயத்தில் உட்கார்ந்து, ஜெபம் செய்து கொண்டிருந்தாள். கர்த்தர் அவளுக்கு, “சிமியோன் கூறுவது உண்மை” என்று வெளிப்படுத்தியிருந்தார். ஆமென்! அவளுக்கு பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இருப்பினும் இன்று பார்வை நன்றாக உள்ளவர்கள் காண்பதை விட அவளால் வெகு தூரத்தில் காணமுடிந்தது. மேசியாவின் வருகை சமீபமாயுள்ளது என்பதை அவள் ஆவியில் கண்டாள். ஆவியானவர் அவளுடைய இருதயத்தில் அசைந்தார். பாருங்கள், அது எவ்வளவு சிறிய சபையாயிருந்ததென்று! சகரியா, எலிசபெத், மரியாள், யோவான், அன்னாள், சிமியோன் - லட்சக்கணக்கானவர்களில் ஆறு பேர் மாத்திரமே! நோவாவின் காலத்தில் இருந்தது போல இவர்கள் சொற்ப பேர் - ஆறு பேர் மாத்திரமே. தேவன் அவர்கள் ஒவ்வொருவருடனும் தொடர்பு கொண்டார். அவர்கள் இசைவாயிருந்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்திருந்தனர். ஆமென்! 76இதோ முதிர்வயதுள்ள சிமியோன் நின்று கொண்டிருக்கிறான், இதோ குழந்தை கொண்டு வரப்படுகிறது. குழந்தை தேவாலயத்துக்கு - கொண்டு வரப்படுகிறது என்று அவன் கேள்விப்படவேயில்லை. இதோ குழந்தை அங்குள்ளது. சிமியோன் அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ஆவியானவர் அவன்மேல் இறங்கி, “சிமியோனே, வெளியே போ” என்கிறார். அவன் எங்கு செல்கிறான் என்று அறியாமலே நடந்து செல்கிறான். ஆபிரகாமைப் போல் அவன் ஏதோ ஒன்றை தேடி செல்கிறான். அது எங்குள்ளது என்று. அவனுக்குத் தெரியவில்லை. ஆயினும் அவன் நடந்து கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் நின்றான். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவனிடம், “அதோ அவர்” என்று கூறியிருக்க வேண்டும். அவன் மரியாளின் கரங்களிலிருந்த குழந்தையை தன் கையிலெடுத்து அண்ணாந்து பார்த்து, “கர்த்தாவே, உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடும். உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறது” என்றான். மற்றவர்கள் ஏளனம் செய்ததை, ஸ்திரீகள், உதறித் தள்ளினதை சிமியோன், ''கர்த்தாவே, அது உம்முடைய இரட்சண்யம்“ என்கிறான். அதே நேரத்தில் பார்வை இழந்த ஒரு முதிய ஸ்திரீ - கூட்டத்தினரின் மத்தியில் தள்ளாடிக் கொண்டு வருகிறாள். அவளும் அவரிடத்தில் வந்து தீர்க்கதரிசனம் - உரைத்தாள். அவள் அவருக்காக - காத்திருந்தாள். அவள் மரியாளிடம், ”உன் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவிப் போகும். ஆனால் அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படும்“ என்றாள். ஆமென். 77அது என்ன? அங்கிருந்த சில பெண்கள், இது எப்படிப்பட்ட குப்பை என்று பார்த்தாயா? அந்த கிழவனுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. அவன் அந்த வேசிப் பெண்ணுக்கு முன்பாக நின்று கொண்டு என்னவெல்லாமோ உளகிறான். பார்த்தாயா? முறை தவறிப் பிறந்த குழந்தை! அந்த கிழவி அங்கு உட்கார்ந்து கொண்டு பட்டினி கிடந்து தன்னை சாகடித்துக் கொள்கிறாள். அவளுக்கு நம்மைப் போல் எந்த பொழுதுபோக்கோ களியாட்டோ கிடையாது. வேண்டுமானால் அவள் நாட்டிலுள்ள எல்லா சங்கங்களிலும் உறுப்பினராயிருக்கலாம். அவள் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள். ஆனால் அந்த கூட்டம் எப்படி ஒன்றாக சேர்ந்து கொள்கிறதென்று பாருங்கள்“ என்று கூறியிருப்பார்களென்று நினைக்கிறேன்: ஓ, ஆமாம். அப்படித்தான். ஆமென்! இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. நாம் பரிசுத்த ஆவியால் உயர்த்தப்பட்டு கிறிஸ்து இயேசுவுடன் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். நிச்சயமாக. ஆம் ஐயா. (ஓ, நமக்கு இன்னும் சிறிது நேரம் கிடைக்குமா?). இன்னும் வேறொரு வேத கதாபாத்திரத்தை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். வார்த்தை மாமிசத்தில் வெளிப்பட்ட போது இருந்த சாஸ்திரிகள். ஃபிரட், அதை படிக்க உங்களுக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும். அதை ஜேபியில் வைத்திருக்கிறீர்களா? உங்களில் அநேகர் அதை பத்திரிகையில் கண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 33 ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் நதியண்டையில் பேசின அதே காரியம். டிசம்பர் 9-ம் தேதி அவர்கள் அதை தோண்டியெடுத்தனர். 78வான சாஸ்திரம் அதை நிரூபித்ததும் எப்படி ஜுபிடரும் மற்ற நட்சத்திரங்களும் அவைகளுடைய “நட்சத்திரக் கூட்டத்தில்...'' அவர்களுக்கு ஒரு பழைய வான சாஸ்திர நாட்காட்டி உள்ளது... அதில் குறிக்கப்பட்டதை தான், அவர்கள் தோண்டியெடுத்தனர். சரியாக அந்த நேரத்தில் இந்த நட்சத்திரங்கள் ஒன்றாககூடி, அந்த நட்சத்திரங்களின் கூட்டம் பாபிலோனை நோக்கி - காணப்பட்டு, அது சாஸ்திரிகளின் கவனத்தைக் கவர்ந்தது. கோடிக்கணக்கான 'லைட் இயர்' தூரத்தில் இருந்த அவை தங்கள் சுழற்பாதைகளை கடந்து ஒன்று கூடினதை - பாபிலோனிலிருந்த அந்த யூத சாஸ்திரிகள் கண்டனர். மூன்று நட்சத்திரங்கள் ஒன்றாக சேரும்போது, அதுவே மேசியா பூமியில் இருக்க வேண்டிய நேரம் என்பதை அவர்கள் தேவனுடைய வார்த்தையின் மூலம் அறிந்திருந்தனர். ஆகையால் தான் அவர்கள் புறப்பட்டு வந்து, யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? அவர் எங்கே? அவர் எங்கோ இருக்க வேண்டும். அந்த நட்சத்திரங்கள் ஒன்றாக... அந்த மூன்று விண்வெளி நட்சத்திரங்கள் ஒரு பெரிய விண்வெளி நட்சத்திரமாக ஆகும் போது, அந்த முன்றும் ஒன்றாக சேரும்போது. அந்த நேரத்தில் மேசியா பூமியில் இருக்க வேண்டுமென்று அந்த மனிதர் அறிந்திருந்தனர். 79அவர்கள் தங்களுடைய படிப்பில் நிபுணர்கள். அவர்கள் மேதைகள். அவர்கள் மதசம்பந்தமான விஞ்ஞானத்தில் நிபுணர்கள். அவர்கள் மதசம்பந்தமான பாகத்தை ஆராய்ந்து படித்து அதை கவனித்து வந்தனர். அந்த கிரகங்கள் (ஜுபிடரும் சாடர்னும்) ஒரே வரிசையில் வருவதைக் கண்ட போது, மேசியா பூமியில் எங்கோ இருக்கிறார். அவர் எருசலேமில் இருக்க வேண்டும். ஏனெனில் அதுதான் உலகிலுள்ள மதங்களுக்கு - மேசியாவின் மதத்துக்கு - தலைமை அலுவலகம். அது ஸ்தாபனங்களின் தலைமை அலுவலகம். அங்குதான் அந்த பெரிய மதசம்பந்தமான குழுக்கள் கூடுகின்றன“ என்றனர். அவர்கள் இரண்டு ஆண்டுகளாக ஒட்டகங்களின் மேல், பயணம் செய்து, டைக்ரிஸ் நதியைக் கடந்து, சேற்றின் வழியாகவும் காடுகளின் வழியாகவும் தங்கள் இருதயங்களில் மகிழ்ச்சி பொங்கினவர்களாய் பயணம் செய்தனர். அந்த கிரகங்கள் அங்கு ஒன்று கூடும்போது, இன்றைய வான சாஸ்திரிகள் கூட, அந்த கிரகங்கள் ஒரே வரிசையில் மறுபடியும் வருமானால், அந்த சாஸ்திரிகள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அதை காணும்போது, அது ஒரு நட்சத்திரமாக தென்படும் என்று கூறுகின்றனர். ஆனால் அதை அதே இடத்திலிருந்து நின்று கொண்டு பார்க்க வேண்டும். ஆமென்! ஆமென்! நீங்கள் எங்கு - நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது. 80நீங்கள் எதை பார்க்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது. எனவே அவர்கள் அதை கண்டு, அதை பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் அதனுடன் ஒரே வரிசையில் இருந்தனர். அவர்கள் எங்கு சென்ற போதிலும், அவர்களுடன் அது ஒரே வரிசையில் காணப்பட்டது. அது அவர்களை வழி நடத்தினது. பாருங்கள்? நீங்களும் கூட எல்லா வேத வாக்கியங்களையும் வரிசைப்படுத்திக் கொண்டு, அந்த வரிசையில் நீங்களும் தங்கியிருக்க வேண்டும். அது தான் ஒரே வழி. அது உங்களை நேராக் அவரிடம் வழி நடத்திச் செல்லும் - நிச்சயமாக செய்யும். இப்பொழுது, கவனியுங்கள், ''இதோ அவர்கள், யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?“ என்று சத்தமிட்டுக் கொண்டே எருசலேமுக்குள் நுழைந்தனர். நட்சத்திரம் அவர்களை அங்கு வழி நடத்திச் சென்றது - ஸ்தாபனங்களின் தலைமை அலுவலகத்திற்கு. ஆனால் அவர்கள் அதிலிருந்து வழிவிலகினபோது. நட்சத்திரம் அவர்களை விட்டுச் சென்றது. அவர்கள் பட்டினத்துக்குள் நுழைந்து வீதியின் மேலும் கீழும்: நடந்து (பட்டினம் தேவனுடைய சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும் என்று அவர்கள் எண்ணினர்). அவர்கள் மகிழ்ச்சி பொங்கினவர்களாய் வீதியின் மேலும் கீழும் நடந்து, ”யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? நாங்கள். கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம்“ என்று கூச்சலிட்டனர். அந்த நட்சத்திரம் - அவர்கள் மேற்கே சென்றனர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்கள் கிழக்கிலிருந்தனர். மேற்கு நோக்கி வழி நடத்தி, இன்னும் சென்று கொண்டேயிருக்கிறது. எங்களை அந்த... முற்றிலுமாக... அவர்கள்... பாபிலோனும் இந்தியாவும் பாலாஸ்தீனாவுக்கு கிழக்கில் அமைந்துள்ளன - ஒருவிதம் தென்கிழக்கில். அவர்கள் மேற்கு திசையில் சென்றனர். “மேற்கு நோக்கி வழி நடத்தி (அந்த பாடல் உங்களுக்குத் தெரியும்), இன்னும் சென்று கொண்டேயிருக்கிறது. அந்த பரிபூரண ஒளிக்கு எங்களை நடத்தும். 81பண்டித சாஸ்திரிகள் மேற்குக்கு சென்று கொண்டிருந்தனர் (அவர்கள் கிழக்கை விட்டு மேற்கு நோக்கி பயணம் செய்தனர்). அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் காண முடியவில்லை. அவர்கள் அங்கு அடைந்த போது (அதுவரைக்கும் நட்சத்திரம் அவர்களை நடத்திச் சென்றது) அது அவர்களை விட்டுச் சென்றது. அவர்கள் நட்சத்திரம் நம்மை விட்டுச் சென்றுவிட்டது. இங்கு தான் அவர் இருக்க வேண்டும். நாம் பட்டினத்தை அடைந்துவிட்டோம், ஓ, என்னே! எல்லோரும் பாடிக் கொண்டு மகிழ்ச்சியாயுள்ளனர். தேவனுடைய மகிமை எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்கிறது. இங்கு நாம் வந்துவிட்டோம். நம்முடைய சாதனை... என்றனர். அவர்கள் அந்த நட்சத்திர சேர்க்கையை கவனித்த போது... யாருமே, எந்த நிபுணனுமே அந்த நட்சத்திரங்களை இழுத்து ஒன்று சேர்க்க முடியாது. அந்த நட்சத்திரம் வானத்தில் தோன்றும் போது, மேசியா பூமியில் இருக்க வேண்டிய நேரம் அதுவே என்று நாம் அறிந்திருக்கிறோம். மேசியா பூமியில் இருக்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு பிறகு அந்த நட்சத்திரங்களின் சேர்க்கை மற்படியும் உண்டாகி பூமிக்கு மறுபடியும் ஒரு ஈவு அளிக்கப்படுகிறது. 82கவனியுங்கள், அந்த நட்சத்திரங்களின் சேர்க்கை உண்டாகும் போது, மேசியா பூமியில் இருக்கிறார். அவர் பூமியில் இருக்கிறார் என்று சாஸ்திரிகள் அறிந்து கொண்டனர். எனவே அவர்கள் மதத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்று... அவர்கள் வீதியின் மேலும் கீழும் அந்த ஒட்டகங்களின் மேல் சென்று, “அவர் எங்கே? நாங்கள் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம். அவர் இங்கு எங்கோ இருக்கிறார். அவர் எங்கே? அவர் எங்கே? அவர் எங்கே?” என்றனர். என்ன ஒரு நிந்தை! அவர்கள் பிரதான ஆசாரியனிடம் சென்றனர். “அவன் உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் மூட மதாபிமானிகள்” என்று கூறியிருப்பான். பாருங்கள், தேவனுடைய வல்லமையினால் அவர்கள் நிகழ்த்திய விஞ்ஞான சாதனைக்கு அது எத்தகைய ஒரு நிந்தை! அவர்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டனர், அவர்கள் சாஸ்திரிகள், ஞானமுள்ளவர்கள், அவர்கள் மத சம்பந்தமான விஞ்ஞானத்தை படித்து வந்தனர். அந்த நட்சத்திரங்களின் சேர்க்கை உண்டாகும் போது, மேசியா பூமியில் எங்காவது இருக்க வேண்டுமென்று அறிந்திருந்தனர். அதை அறிந்திருக்க வேண்டிய இடம், அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. 83தெருவில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள், “ஹா! அதை பாருங்கள். ஹா! மூட மதாபிமானிகளின் கூட்டம். யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்று அவர்கள் பாடுவதைக் கேளுங்கள். ஏரோது இங்கு ராஜா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு பேராயர் யாரென்று தெரியவில்லை” என்று கேலி செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஓ, என்னே! “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? நாங்கள் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம்.” அவர்கள், ஞானிகளே, இங்கு வாருங்கள். நீங்கள் ஏதாவது நட்சத்திரத்தைக் காண்கிறீர்களா?“ என்று கேட்டனர். “நான் எதையும் காணவில்லையே.” “வான சாஸ்திரிகளே, இங்கு வாருங்கள். உங்களுக்கு நட்சத்திரம் ஏதாவது தென்படுகிறதா?” “இல்லையே”. “இல்லையே”. “மர்மமான அடையாளம் ஏதாவது தென்படுகிறதா?”. இல்லையே, எங்களுக்கு ஒன்றும் தென்படவில்லையே. “இல்லை, இன்றைக்கும் அவர்களுக்கு தென்படுவதில்லை. அதே விஷயம் தான். அவர்களால் ஒன்றும் காணமுடியவில்லை. அவர்களால் காணமுடியாது. “நாம் போதகர்களை வரவழைப்போம். நீங்கள் கண்டீர்களா”? “எங்களுக்கு நட்சத்திரம் எதுவும் தென்படவில்லை.” ஜாமக்காரராகிய நீங்கள் காண்கிறீர்களா? நீங்கள் ஆண்டு பூராவும் நட்சத்திரங்களின் போக்கை கவனித்து வருகிறீர்கள். வானத்தில் “நட்சத்திரங்களின் சேர்க்கை” ஒவ்வொன்றும் உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு நட்சத்திரத்தையும் குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஏதாவது தென்படுகிறதா?“ “இல்லை, ஒன்றுமே தென்படவில்லை.” 84ஆனால் அது அங்கிருந்தது! அது இப்பொழுது அங்குள்ளது! அவர்களால் அதை காணமுடியாது. அவர்களைக் சுற்றி அது சென்று கொண்டிருக்கிறது. அவர்களால் அதை காண முடியாது. “ஆ, நாங்கள் எதையும் காணவில்லை”. “ஓ, அங்கு சென்றிருந்தேன். நான் எதையும் காணவில்லை.” நிச்சயமாக நீ காணமாட்டாய். நீ மிகவும் குருடனாயிருக்கிறாய், அது நீ காண்பதற்காக அல்ல. நீ அவ்வளவு குருடாயிருந்தால், நிச்சயமாக அதை காணமாட்டாய். தேவன் அதை யாருக்கு வெளிப்படுத்துகிறாரோ, அவர்களுக்கு மாத்திரமே. அவர்கள் மாத்திரமே அதை காணமுடியும், அது எக்காலத்தும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. நிச்சயமாக! 85வானத்தில் மழை இருந்ததை நோவா மாத்திரமே காணமுடிந்தது, மற்றவர்கள் அதை காண முடியவில்லை. அவர்கள் மேலே மழை இருந்ததை காணவில்லை, ஆனால் நோவா கண்டான். சாராள் குழந்தையைக் கையில் பிடித்துள்ளதை ஆபிரகாம் மாத்திரமே கண்டான். “ஜாதிகளுக்குத் தகப்பனே, உனக்கு இப்பொழுது எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்?” என்று கேலி செய்த பரியாசக்காரர்கள் அல்ல. நாம் இப்படியாக வேதத்திலுள்ள பரிசத்தவான்களையும் தீர்க்கதரிசிகளையும் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். “விசுவாசம் என்பது... காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. வார்த்தை உரைக்கப்பட்டுவிட்டது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இதோ அதன் நிச்சயம், அவர்கள் அதை காண்கின்றனர். 86அங்கு ஒன்றுமேயில்லை, ஏன்? அவர்கள் அதைத் தேடிச் சென்று அப்படிப்பட்ட கூட்டத்தினரிடையே சென்றபோது, நட்சத்திரம் ஒளி கொடுக்காமல் மறைந்துவிட்டது. இன்றைக்கு நடப்பதும் அதுவே. அதுதான் அநேக ஒளியை அணைத்துவிட்டது. அது உண்மை. அதாவது அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தினருடன் இணையும் காரணத்தால், அவர்கள் முதலிடம் அதை விசுவாசிப்பதில்லை. அப்படியிருக்க சபைகளின் ஐக்கியம் எப்படி உண்டாக முடியும்? நாம் ஒருமனப்பட்டிருந்தாலொழிய, எப்படி ஒருமித்து நடந்து போக முடியும்? நாம் லட்சக்கணக்கான மைல்கள் தூரம் இருக்கும்போது, உலகம் முழுவதிலும் சபை இணைக்கப்பட்டு. நாம் எப்படி ஐக்கியப்பட்டிருக்க முடியும்? சுவிசேஷகர்களாகிய நம்முடன் இவர்கள், அவர்கள், அவர்கள், எல்லாருமே ஒன்றாக இணைக்கப்படுதல். அது அழுகிப்போன ஒரு கூட்டம்! தேவன் தூய்மையான, பரிசுத்தமான; கலப்படமற்ற, தமது வார்த்தையில் நிற்கும் ஒரு மனைவியை பெற்றுக் கொள்கிறார். 87சரி. வார்த்தையின் நிமித்தம் இயேசுவுக்கு வந்த நிந்தை (இதை கூறிவிட்டு ஒரு நிமிடத்தில் முடித்துக் கொள்வோம்). வார்த்தையின் நிமித்தம் இயேசு நிந்திக்கப்பட்டார். இங்கு பாருங்கள். அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட தேவனாயிருக்க, அவர் ஏன் நிந்தையை சகிக்க வேண்டும்? அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட தேவன். வேதம் அவ்வாறு உரைக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எங்கள் கைகளினாலே அவரைத் தொட்டோம். அவர் தேவ தூதர்களால் காணப்பட்டார். தீமோத்தேயு இவ்வாறு உரைக்கிறான் என்று நினைக்கிறேன். அன்றியும் தேவபக்திக்குரிய இரகசிய மானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் (1 தீமோ.3 : 16). அவருடைய பிறப்பின் போது தேவ தூதர்கள் இருந்தனர். தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டு முன்னணையில் கிடத்தப்பட்டிருப்பதை கண்ட போது, அவர்கள் எவ்வளவாக களிகூர்ந்திருக்க வேண்டும். ஆமென். “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக். 2 : 1) என்று அவர்கள் ஆர்ப்பரித்ததில் வியப்பொன்றுமில்லை. தேவ தூதர்கள் களிகூர்ந்து தங்கள் பெரிய செட்டைகளை அடித்து யூதேயாவின் மலைகளின் மேல் பறந்து சென்று. “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி தேவனைத் துதித்துப் பாடினார்கள். தேவனுடைய வார்த்தை மாமிசத்தில் வெளிப்பட்டதை அவர்கள் கண்டு களித்தார்கள். 88ஆனால் சாத்தான் இதை நம்பவில்லை. அவன். “நீர் தேவனுடைய குமாரனேயானால்... என்றான்”. தேவ தூதன், “அவர் தேவனுடைய குமாரனே” என்றான். அதுதான் வித்தியாசம். “நீர் தேவனுடைய குமாரனேயானால் இன்னின்னதை நீர் செய்வதை நான் காணட்டும். ஆனால் தேவ தூதனோ அவர் அங்கிருக்கிறார்” என்றான். மத சம்பந்தமான விஞ்ஞானத்தைப் படித்த சாஸ்திரிகளும், அவர் அங்கிருக்கிறார்“ என்றனர். ஆமென். புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு நிறைவேறினவைகளை ருசுப்படுத்த இன்று தோண்டிக் கொண்டிருக்கின்றனர்... அவர்கள் ஒருபோதும்... 89பொந்தியு பிலாத்து இவ்வுலகில் இருந்ததாக சரித்திரம் எதுவுமில்லையென்று உங்களுக்குத் தெரியுமா? இங்குள்ள பள்ளிச் சிறுவர்களில் யாராகிலும் என்னிடம் கூறுங்கள், பொந்தியு பிலாத்து இருந்ததாக சரித்திரத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது? அவிசுவாசிகள் அதைக் கண்டு பரியாசம் செய்து, அந்த பெயர் கொண்ட ரோமச் சக்கிரவர்த்தி... பொந்தியு பிலாத்து என்னும் பெயர் கொண்ட ரோம தேசாதிபதி யாருமே இல்லை என்றனர். ஆனால் ஆறு வாரங்களுக்கு முன்பு அவர்கள், பொந்தியு பிலாத்து தேசாதிபதி என்று பொறிக்கப்பட்ட ஒரு மூலைக்கல்லை தோண்டியெடுத்தனர். ஓ, என்னே, அப்படிப்பட்ட முடத்தனமான பேச்சுக்கள். அவர்கள், “ரமேசஸ் என்னும் பெயர் கொண்ட பார்வோன் எகிப்தின் சரித்திரத்திலேயே இல்லை” என்றனர். ஆனால் புதைப் பொருள் ஆய்வாளர்கள் அன்று இரண்டாம் ரமேசஸ் என்று பொறிக்கப்பட்ட கல்லைத் தோண்டியெடுத்தனர். கவனியுங்கள், “எரிகோவின் மதில்கள் விழவேயில்லை என்று அவர்கள் கூறினர். புதைப் பொருள் ஆய்வாளர்கள் அன்று தோண்டிக் கொண்டிருந்தபோது, ஆழத்தில் அவர்கள் விழுந்து போன எரிகோவின் மதில் சுவர்களைக் கண்டுபிடித்தனர் (உங்களுக்குத் தெரியும், எக்காளம் ஊதப்பட்ட போது). அவர்கள், அது யாரோ உண்டாக்கின கட்டுக்கதை” என்றனர். ஆம்! பரியாசக்காரர்கள், அது வெறும் கட்டுக்கதை. யோசுவா எக்காளம் ஊதின போது, மதில் சுவர்கள் இடிந்து விழுந்தன என்று கூறுகின்றனரே, “அப்படியொன்றும் நடக்கவில்லை” என்றனர். ஆனால் சிறந்த கிறிஸ்தவ புதைப் பொருள் ஆய்வாளர் ஒருவர் தோண்டிக் கொண்டேயிருந்தார். ஏனெனில் அது உண்மையில் நடந்திருக்க வேண்டுமென்று அவர் உறுதியாக அறிந்திருந்தார். அவர் 30 அடி ஆழத்தில் தோண்டினபோது, தேவனுடைய வார்த்தை உரைத்தபடியே, மதில் சுவர்கள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்திருக்கக் கண்டார். 90அவர்கள், “தாவீது பத்து நரம்பு வீணையை வாசிக்கவில்லை. ஏனெனில் 15ம் நூற்றாண்டு வரைக்கும் நரம்பு வாத்தியங்கள் கண்டு பிடிக்கப்படவில்லை. அப்படியொன்றுமே கிடையாது” என்றனர். எகிப்தில் கிறிஸ்தவ புதைப் பொருள் ஆய்வாளர்கள் தோண்டின போது, நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நரம்பு வாத்தியங்கள் இருந்ததாக அவர்கள் கண்டுபிடித்தனர், ஓ, என்னே! “எபிரேய பிள்ளைகள் வைக்கோலினால் செங்கல்லை உண்டாக்கினதை குறித்து அவர்கள், அப்படியொன்றும் கிடையாது” என்றனர். புதைப்பொருள் ஆய்வாளர்கள் தோண்டினபோது, அவர்கள் கண்டது என்ன? (அது விஞ்ஞானம்). எபிரேயர்கள் கட்டின பட்டினத்து மதில் சுவர்களில், முதலாம் அடுக்கு கற்கள் நீண்ட வைக்கோலைக் கொண்டதாகவும், இரண்டாவது அடுக்கு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வைக்கோல் கட்டைக் கொண்டிருந்ததாகவும், மூன்றாம் அடுக்கில் வைக்கோலே இல்லையென்றும் அவர்கள் கண்டு பிடித்தனர். நாடுகள் உடைகின்றன இஸ்ரவேல் விழித்தெழுகின்றாள், இவை தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்களாம்... 91ஆம், ஐயா. சகோதரனே, சகோதரியே, இவையனைத்தும் நகர்ந்து நம்மிடம் வந்துள்ளது. அது ஏன்? கடந்த சில ஆண்டுகளாக திரையுலகம் சாதித்து வருவதை இதற்கு முன்பு சாதித்ததேயில்லை. சிசில் டி மில் தயாரித்த பத்து கட்டளைகள் என்னும் திரைப்படம் வந்துவிட்டது. அவ்வாறே பென் ஹர் என்னும் திரைப்படத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை சரித்திரம் திரைக்கு வந்துவிட்டது. பேதுருவின் மனமாற்றத்தை சித்தரிக்கும் பெரிய செம்படவன் என்னும் திரைப்படம் வந்துவிட்டது. இவ்வளவு காலமாக திரையுலகம் நிராகரித்து, அசுசிப்படுத்தி, கிழித்தெறிந்த இந்த மத சம்பந்தமான வரலாறுகளை தேவன் தமது பலத்த வல்லமையினால் திரைக்கு வரும்படி செய்தார். 92சில ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட காரியங்கள் இப்பொழுது... என்னைப் போன்ற எளிய, “தாழ்மையுள்ள ஊழியக்காரன் நான், ஒரு ஒளி தோன்றி என்னுடன் பேசி, நான் செய்ய வேண்டியவைகளை எனக்கு அறிவித்தது” என்று கூறினபோது, ஜனங்கள் நகைத்து, கேலி செய்து, “அவருடைய தலைக்கு ஏதோ நேர்ந்துவிட்டது” என்றனர். ஆனால் அதன் புகைப்படத்தை விஞ்ஞானம் எடுத்து, அது சத்தியம் என்று உணர்த்தினது (உரைக்கப்பட்ட வார்த்தை வால்யூம் 2, எண் 9 ஐக் காணுங்கள் - ஆசி). நான், “அந்த ஸ்திரீ மரணத்துக்கேதுவாக நிழலிடப்பட்டிருக்கிறாள்” எனறேன். அவர்கள், “நிழலிடப்படுவதா? அது மூடத்தனமானது. அவர் கற்பனை செய்கிறார்” என்றனர். அதன் புகைப்படம் உள்ளது (உரைக்கப்பட்ட வார்த்தை வால்யூம் 2, எண் 8 ஐக் காணுங்கள் -ஆசி). தேவன் கற்கள் கூப்பிடும்படி செய்வார். அவர் விரும்புவதை அவரால் செய்ய முடியும். 93இயேசு, தேவனுடைய குமாரன், இம்மானுவேல், அங்கு நின்று கொண்டு, வார்த்தையின் நிமித்தம் நிந்தை அனுபவித்தார். என்னே ஒரு நிந்தை அவிசுவாசியாகிய பாவி அவரைக் கட்டவும், முகத்தில் துப்பவும், தாடி மயிரை பிய்க்கவும். எதை வேண்டுமானாலும் செய்ய துணிச்சல் கொள்ளவும் அவனை அனுமதித்தார். வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தை. எதற்காக? பிதாவின் வார்த்தையை நிறைவேற்றுவதற்காக. ஓ! ஞாபகம் கொள்ளுங்கள், அவர் மரணத்தின் நிந்தையை சகிக்க வேண்டியவராயிருந்தார். அவர் மரிக்கக் கூடாத தேவன், ஆனால் பாவியை இரட்சிக்க அவர் ஒருவர் மாத்திரமே மரிக்க வேண்டும். இரண்டாம் ஆள், மூன்றாம் ஆள் அதை செய்ய முடியாது. தேவன் ஒருவர் மாத்திரமே அதை செய்ய முடியும். இதோ அவர். அவர், “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை” என்றார். (யோவான். 3 13). அவர்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைப் புசித்தார்கள். உம்மை ஜீவ அப்பம் என்று அழைத்துக் கொள்கிறீரே” என்றார்கள். அவர், “ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார். (யோவான் 8 : 58). அவர்கள், “உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே. நீ ஆபிரகாமை கண்டாயோ” என்றார்கள். (யோவான். 8 : 57). அவர், “ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்று சொன்ன பிறகு, பாவிகள், ஸ்தாபன சபைகள், அவரைக் கட்டும்படி அனுமதித்தார். கடைசி நாட்களில் இந்த ஐசுவரியமுள்ள லவோதிக்கேயா சபை அவரை சபையை விட்டுப் புறம்பாக்கினது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 94இப்பொழுது அது எங்குள்ளதென்று காண்கிறீர்களா? நான் ஏன் அந்த ஸ்தாபன முறைமைக்கு விரோதமாய் கூக்குரலிடுகிறேன் என்பதை உங்களால் காண முடிகிறதா? பாவிகள் அவரைக் கட்ட இயேசு ஏன் அனுமதித்தார்? வார்த்தையை நிறைவேற்றுவதற்கென மரணம் என்னும் நிந்தை தேவன் மேல் வருவதற்கென தேவன் மரிக்க வேண்டியதாயிருந்தது. இயேசு அதை அறிந்திருந்தார். அதைக் குறித்து அவர் அவர்களிடம் முன்னுரைத்தார். அவர் “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை நான் எழுப்புவேன்” என்றார் (யோவன் 2 : 19) வேறு யாரும் அதை எழுப்புவதல்ல, இதை நான் எழுப்புவேன். மூன்று நாளைக்குள்ளே அதை மீண்டும் கொண்டு வருவேன். நீங்கள் இடித்துப் போடுங்கள். அதை நான் எழுப்புவேன். அவர், “யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் பூமியின் இருதயத்தில் இருப்பார்” என்றார். (மத். 12 : 40). அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. பாருங்கள். வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தை. 95அவர் மரணத்துக்கென்று நிந்திக்கப்பட்டு, நித்திய ஜீவனுக்கென்று எழுப்பப்பட்டார். முதலாவதாக அவர் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டியதாயிருந்தது. அதன் மூலம் அவர் நித்திய ஜீவனுக்கு எழுப்பப்பட்டு, அதை ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு மனிதனுக்கும் நித்திய ஜீவனை அளித்தார். பாருங்கள், அவர் மனிதனாக, இனத்தான் மீட்பராக வெளிப்பட்டு, அவருக்கு முன்பாக தோன்றின மோசே, நோவா போன்ற ஊழியக்காரர் அனைவரும் சகித்த நிந்தையை, பரியாசத்தை இவரும் சகிக்க வேண்டியதாயிருந்தது. ஏன்? அவர் வார்த்தையைக் கொண்டிருந்தார், அவரே வார்த்தையாயிருந்தார். ஆகையால் தான் அவர்கள் மறறெல்லாரைக் காட்டிலும் இவரை அதிகமாக நிந்தித் தனர். அவர் தேவன், அவரே வார்த்தை. அல்லேலூயா! 96அதுதான் அவரை... இயேசு, “மாயக்காரரே, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். நீங்கள் தான் அவர்களை அங்கு வைத்தீர்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையுடன் வந்தனர். நீங்களோ அவர்களை விசுவாசிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவருடைய இரத்தப்பழிக்கும் நீங்கள் குற்றவாளிகள்” என்றார். தேவனுக்கு சித்தமானால், பீனிக்ஸில், இந்த சந்ததி இயேசு கிறிஸ்துவைக் கொன்றதாக அவர்கள் மேல் குற்றச்சாட்டைக் கொண்டுவரப் போகின்றேன். அவரை மறுபடியும் சிலுவையில் அறைந்ததற்காக. தேவனுக்கு சித்தமானால், போதகர் சங்கத்தில் இந்த குற்றச்சாட்டைக் கொண்டு வரப் போகின்றேன. இயேசு கிறிஸ்துவை அவர்கள் மறுபடியும் சிலுவையில் அறைந்து அவருடைய இரத்தப்பழிக்கு ஆளாயிருக்கிறார்கள். அவர்களை நான் குற்றஞ் சாட்டப் போகின்றேன். பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு. “நீங்கள் அக்கிரமக்காரருடைய கைகளினால் அந்த ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள். இவரைத் தேவன் எழுப்பினார். இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்” என்று சொல்லி அவர்கள் மேல் குற்றஞ்சாட்டினான். நான் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு. உலகிலுள்ள ஒவ்வொரு ஸ்தாபனத்தையும் அதிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்துக்கு குற்றவாளிகளாக அவர்கள் மேல் குற்றஞ்சாட்டப் போகின்றேன். அந்த நாளில் நான் தேவனுடைய வழக்கறிஞராயிருக்க தேவன் உதவி புரிவாராக. ஆமென்! 97ஆம், ஓ பரியாசக்காரர் அவரை பரியாசம் பண்ணினார்கள், அவரை நிந்தித்தார்கள். அவரோ அதில் உறுதியாக நின்றார். ஆமென். ஓ, அவர் என்ன செய்தாரென்று கவனியுங்கள். அவர் தேவனுடைய குமாரன். அவர் பாவத்தை மரணத்துக்குட்படுத்த, தாமே மரித்தார். அவர் அப்படி செய்ய வேண்டியதாயிருந்தது. அந்த ஒரு வழியில் மாத்திரமே அவரால் பாவத்தை மரணத்துக் குட்படுத்த முடியும். அவர் அதை செய்து அதை சகித்தார். அவருக்கு முன்னால் இருந்த மற்றவர் அனைவரும் தேவனுடைய வார்த்தையின் ஒரு பாகத்தை மாத்திரமே உடையவர்களாயிருந்தனர். தீர்க்கதரிசிகளுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது என்று இயேசு கூறினார். அவர்களில் யாரை உங்கள் பிதாக்கள், ஸ்தாபன மார்க்கங்கள், கல்லெறிந்து கொல்லாமல் இருந்தார்கள்? அவர்களில் யார் தீர்க்கதரிசிகளை ஏற்றுக் கொண்டார்கள்? அவர்களை கல்லெறிந்து கொன்ற பிறகு, நீங்கள் அவர்களுக்கு கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். அவர்களைக் கல்லறைகளில் வைத்ததற்கு நீங்கள் குற்றவாளிகளாயிருக்கிறீர்கள்“ என்றார் இயேசு. அதன் பிறகு அவர் திராட்சை தோட்டத்து உவமையை அவர்களிடம் கூறினார். ஊழியக்காரர் அனுப்பப்பட்டபோது. அவர்கள் ஊழியக்காரரை துன்புறுத்தினார்கள். முடிவில் அவர்கள் “நாம் குமாரனைக் கொன்று போடுவோம். அவன் சுதந்தரவாளி” என்றனர். (மத். 21 : 33- 41). ஓ, அவர்கள் குமாரனைக் கண்டபோது கோபமுற்றார்கள். 98அவர் நிந்தையைச் சகிக்க வேண்டியதாயிருந்தது. அவர் கட்டப்பட்டு மரணத்துக்கு நடத்தப்பட்டு, நித்திய ஜீவனை அளிப்பதற்கென அங்கே மரணத்துக்கு ஒப்புவிக்கப்பட்டார். தேவனுக்கு மகிமை! ஓ, அவரை நான் எவ்வளவாக நேசிக்கிறேன். காலங்கள் தோறும் வார்த்தையில் நின்று நிந்தையைச் சகித்தவர்களை மறுபடியும் எழுப்பி அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்கென தேவனுடைய குமாரன் மரணம் எய்தினார். அது உண்மை. அவர், வந்திராவிட்டால், “நோவா உயிரோடெழுந்திருந்திருக்க மாட்டான். அவர் வந்திராவிட்டால், எலியா உயிரோடு எழுந்து இருந்திருக்க மாட்டான். அவர் வந்திராவிட்டால்... ஏனெனில் அவர் முன் குறிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராக இவ்வுலகில் வந்து, தம் மேல் நிந்தையைச் சுமந்து, உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றுக்கும் உறுதியாய் நின்ற அந்த நீதிமான்களுக்காக மரணம் எய்தினார். அது அப்படித்தான் இருக்க வேண்டும். தேவனைத் தவிர வேறு யாரும் அதைச் செய்ய முடியாது. அவர் இங்கு வந்து, அதே வார்த்தையில் உறுதியாய் நின்று நிந்தையை அனுபவித்த ஒவ்வொரு தேவ புத்திரனையும் மீட்டுஅவனுக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்கென அந்த ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். 99காலங்கள் தோறும் நிந்தையை அனுபவித்த ஒவ்வொரு தேவனுடைய குமாரனும்... அவனை மீட்க யாருமே இருக்கவில்லை. ஆனால் அவன் விசுவாசத்தினால் மீட்பர் வருகிறதைக் கண்டான். யோபு அவரைக் கண்டான். யோபுவை அவர்கள், “ஓ, நீ இரகசிய பாவி, ஆகையால் தான் தேவன் உன்னை கஷ்டப்படுத்துகிறார்” என்றனர். அவன், என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்“ என்றான். அவனுடைய மனைவி, “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும். உம்மைப் பார்த்தால் பரிதாபமாயுள்ளது” என்றாள். அவனோ, “நீ பயித்தியக்காரி பேசுகிறது போலப் பேசுகிறாய்” என்றான். ஆமென். அவனைப் பாருங்கள். அவர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார். 100இயேசு வந்திராவிட்டால், யோபு மீட்கப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் அவர் உலகத் தோற்றத்துக்கு முன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராக இருந்தார் . அவருடைய இடத்தை அவர் அறிந்திருந்தார், அவருடைய ஸ்தானத்தை அவர் அறிந்திருந்தார். அன்று மரியாள் வீட்டை விட்டு வெளியே வந்து இயேசுவைச் சந்தித்து, “நீர் இங்கே இருந்தீரானால், என் சகோதரன் மரிக்க மாட்டான்” என்று கூறின போது, அவள் அந்த ஸ்தானத்தை அடையாளம் கண்டு கொண்டாள். அவர், “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்றார். அவள், “ஆம், ஆண்டவரே, உயிர்த்தெழுதலின் போது, அவன் நல்லவன்” என்றாள். இயேசு, “நானே உயிர்த்தெழுதல். இதை விசுவாசிக்கிறாயா?” என்றார். அவள், “ஆம் ஆண்டவரே, நீரே பூமிக்கு வந்த மனுஷகுமாரன்” என்று நான் விசுவாசிக்கிறேன். அவர், “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். பார்த்தீர்களா? அவள் அதை அடையாளம் கண்டு கொண்டாள். 101அந்த ஸ்திரீ அவரால் முடியாது என்று கூறவில்லை... அவளிடமிருந்து பிசாசுகள் துரத்தப்பட்டதை அவள் கண்டிருக்கிறாள். அவள் தேவனுடைய வல்லமையை அறிந்திருந்தாள். அது அவளிலிருந்த பெருமை, கோபம், அந்த உயர்நிலைப் பள்ளியின் சுயநல ஆவி போன்றவைகளை எடுத்துப் போட்டு, அவளை புது சிருஷ்டியாக மாற்றினது. அவர் அவளுக்குள் இருந்த ஏழு பிசாசகளைத் துரத்தினார். அவர் யாரென்பதை அவர்கள் அறிந்து அதை ஏற்றுக் கொண்டபோது, அவர் தங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். இன்றைக்கும் கூட அவர்கள் அப்படியே அதை ஏற்றுக் கொள்கின்றனர். அவள் அதை கூறின பின்பு அவர், என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியும். ஓ, அதே வார்த்தைக்காக பாடுபடும் அனைவரும் அந்த நோக்கத்துக்காகவே அவர் மரித்தார். அவர் ஒருவர் மாத்திரமே மரித்து அதை செய்ய முடியும். ஏனெனில் அவர் வார்த்தை மாமிசத்தில் வெளிப்பட்ட வார்த்தை. மற்றவர் அனைவரும் வார்த்தையின் ஒரு பாகத்தை பெற்றிருந்தனர். ஆனால் இவரோ தேவனுடைய பரிபூரணமாயிருந்தார். அவர் இன்றும் மாறாதவராயிருக்கிறார். எபி. 13 : 8 : “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். கவனியுங்கள்! (நான் முடிக்கப் போகிறேன். உண்மையாக நான் முடிக்கப் போகிறேன். நான் முடிக்க வேண்டும். எனக்கு அளிக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டது) 102அவர் ஒரு வார்த்தையும் கூட எழுதவில்லை. அவர் எழுதினாரா? அவர் ஒரு வார்த்தையும் கூட எழுதவில்லை. அவரே வார்த்தை. வார்த்தையாகிய இவரைக் குறித்து அநேக வார்த்தைகள் எழுதப்பட்டன. அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட வார்த்தை. மகிமை! எனக்கு இப்பொழுது நல்லுணர்வு தோன்றுகிறது. அவரே வார்த்தை. அவரைக் குறித்து அவர் எதையும் எழுத வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவரே வெளிப்பட்ட வார்த்தை. தேவனுக்கு மகிமை! அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்! அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட வார்த்தை. நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, அது உண்மையா? எனலாம். யேகோவா அங்கு நின்று கொண்டு காற்றை அந்த அலைகளின் மேல் ஊதி, இஸ்ரவேல் ஜனங்கள் அதன் வழியாக நடந்து செல்ல ஒரு பாதையை உண்டாக்கினதை கவனியுங்கள். யேகோவா முன்னால் நின்று கடலை நோக்கி, ”இரையாதே, அமைதலாயிரு“ என்று அதட்டினதை கவனியுங்கள். காற்று பலமாக அடித்து அலைகள் உயர எழும்பி, பிசாசு மும்முரமாக செயல்பட்ட போது, அவர், ”இரையாதே, அமைதலாயிரு“ என்றார்... காற்றும் கடலும் அவருக்கு கீழ்ப்படிந்தது. அவர் யேகோவா. ஆமென்! 103யேகோவா அங்கு நின்றுகொண்டு சில பனித் துளிகளைத் தூவி, அது பூமியை அடைந்து ஜனங்களை போஷிக்கும் அப்பமாக ஆனது. அவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேர்களைப் போஷித்தார். அவர் வார்த்தையாயிருந்தார். ஆமென்! ஆமென்! அவர் வார்த்தையாயிருக்கிறார். அவர் என்றென்றும் வார்த்தையாயிருப்பார். நானும் என் வீட்டாருமோவென்றால், வார்த்தையையே சேவிப்போம். ஓ, அவரைக் காண விரும்புகிறேன், அவருடைய முகத்தை நோக்க விரும்புகிறேன், அங்கு என்றென்றும் அவருடைய இரட்சிப்பின் கிருபையைப் பாட மகிமையின் வீதிகளில் என் சத்தத்தை நான் உயர்த்தட்டும் கவலைகள் எல்லாம் கடந்த பிறகு முடிவில் வீட்டுக்கு சென்று, எப்பொழுதும் களிகூருவோம். ஓ,என்னே! ஆம், வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தையைச் சகிப்போம். வார்த்தையுடன் நிந்தை சம்பந்தப்பட்டுள்ளது. வார்த்தையில் உறுதியாய் நின்று நிந்தையைச் சகிப்போம். ஜெபம் செய்வோம். 104இயேசுவே, அன்றொரு இரவு கர்த்தாவே நான், “ஓ, இயேசுவே, நான் என்ன செய்ய வேண்டுமென்று சித்தம் கொண்டிருக்கிறீர்? கர்த்தாவே, நான் என்ன செய்வேன்? இவைகளைக் கண்டு, நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தை அறிந்தவனாய், கர்த்தாவே, நான் என்ன செய்வேன்? நான் என்ன செய்வேன்?” என்று கதறினேன். கர்த்தாவே, இங்குள்ள என் சிறு சபைக்காக ஜெபிக்கிறேன். தரிசனத்தில் நான் கண்ட சிறு பறவைகளை நினைவு கூருகிறேன். அவைககளக் காட்டிலும் பெரிய பறவைகள் காணப்பட்டன. கர்த்தாவே, அவை மூன்று அடுக்குகளில் இருந்தன. ஆனால் அந்த தேவ தூதர்கள் தோன்றின போது, பாரம் எதுவும் இருக்கவில்லை. கர்த்தாவே, அவர்கள் அருமையான தூதர்கள். ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறதென்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, அது நடக்கட்டும். எங்களை உமது சித்தப்படி வனையும். நாங்கள் களிமண், நீர் குயவன். 105கர்த்தாவே, கிறிஸ்துமஸுக்கு முந்தின இந்த மாலை வேளையில், தேவன் எங்களுக்கு அருளின ஈவுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இது ஒரு அஞ்ஞான மூட நம்பிக்கையாயிருந்த போதிலும், இந்த நாளை அவர்கள் கிறிஸ்துமஸ் நாளாக்கிவிட்டனர். தேவன் எங்களுக்கு ஒரு ஈவைத் தந்தருளினார் என்று நாங்கள் மனப்பூர்வமாக விசுவாசிக்கிறோம். நாங்கள் சாந்தா கிளாஸ், கிறிஸ்துமஸ் மரம், அதன் அலங்காரம் ஆகிய முறைகளைக் கொண்டு உம்மிடம் வராமல், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வந்து, பரலோகத்தின் தேவன் தாமே எங்களைப் போன்ற மானிடனாகி, எங்கள் நடுவில் வாசம் செய்து, உலகப் பிரகாரமான ஸ்தாபனம் அந்த இம்மானுவேலை மரணத்துக்குள்ளாக்கி, சிலுவையின் நிந்தையை அவர் மேல் சுமத்தி, அதன் மூலம் எங்களுக்கு நித்திய ஜீவனை சம்பாதித்து தந்த அந்த தேவனை வழிபட வந்திருக்கிறோம். கர்த்தாவே, நாங்கள் எம்மாத்திரம்? நிந்தையை உதறித் தள்ளுவதற்கு நாங்கள் யார்? தேவனே, எங்களைத் தீரமுள்ளவீரர்களாக்கும். பிதாவே, இந்த வார்த்தைகளை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். நான் களைப்படைந்திருந்த காரணத்தால், இவை ஒருக்கால் தொடர்ச்சியாக இராமலிருக்க வகையுண்டு. பிதாவே, இவ்வளவு நேரம் அவர்கள் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்ததற்காக அவர்களுக்கு பலனை அளிப்பீராக. இந்தக் கடைசி நாட்களில் எங்கள் கர்த்தரை, எங்களுக்கு இரட்சகராக சமர்ப்பித்த அந்த வல்லமை இங்குள்ள ஒவ்வொரு ஆவியையும் உயிர்ப்பித்து, கர்த்தராகிய இயேசுவின் வருகை அருகாமையிலுள்ளதை உணர்த்துவதாக. பிதாவே, அது அப்படியே ஆகட்டும். 106எங்கள் மத்தியிலுள்ள வியாதியஸ்தரையும் அவதியறுவோரையும் சுகப்படுத்தும். நொறுங்குண்ட இருதயங்களைக் கட்டுவீராக... கர்த்தாவே, நாங்கள் அதிக துன்பம் அனுபவித்துள்ளோம். கர்த்தாவே, கடுமையான யுத்தங்களின் விளைவாக என் இருதயத்தில் அநேக தழும்புகள் ஏற்பட்டுள்ளன. நான் ஒரு பழைய போர் வீரன்: கர்த்தாவே, எனக்குதவி. செய்யும். எனக்கு உமது உதவி தேவை. ஒருக்கால் இவையனைத்தும்... (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி). கர்த்தாவே, அது அப்படித்தான் இருந்திருக்குமென்று நினைக்கிறேன். ஓ, தேவனே, எனக்குதவி செய்யும். இந்த சபைக்கும் உதவி செய்து எங்களை ஒருமித்து ஆசீர்வதிப்பீராக. சிறு பிள்ளைகளை ஆசீர்வதியும். வெகுமதிகளை பெற வாய்ப்பில்லாத அநேக ஏழை பிள்ளைகளை நான் நினைவு கூருகிறேன். அவர்களோடு கூட இருந்து அவர்களுக்குதவி செய்வீராக. கர்த்தாவே, அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பீராக. எங்களுக்குத் தேவையான கிறிஸ்துமஸ் வெகுமதி அதுவே. இயேசு கிறிஸ்துவின் ஜீவன் என் இருதயத்தில் ஆளுகை செய்யட்டும். கர்த்தாவே, அதுதான் எனக்கு தேவை. இப்பொழுது, எங்கள் அனைவரையும் ஒருமித்து ஆசீர்வதியும். இந்த வார்த்தைகளை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். இருதயம் எங்கெங்கு திறக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் இரட்சிப்பு உண்டாகட்டும். இயேசுவின் நாமத்தில், ஆமென். 107எத்தனை பேர் அவரை நேசிக்கிறீர்கள்? நாம் எதற்காக இவ்வளவு அவசரப்பட வேண்டும்? ஓ, அவரை நான் நேசிக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன்! கர்த்தாவே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? இன்றிரவு ஆராதனையை மறந்துவிடாதீர்கள். கிறிஸ்துமஸ் என்பதன் அர்த்தம் என்னவென்று இப்பொழுது அறிந்து கொண்டீர்களா? ஓ, இது என் கிறிஸ்துமஸ் வெகுமதி, இது அந்த வார்த்தை. கர்த்தாவே, நான் மாத்திரம்... நான் மாத்திரம் வழியை விட்டு விலகி நின்று, உமது வார்த்தை தம்மை பரிபூரணமாக இங்கு வெளிப்படுத்துமானால், அதுவே நான் அறிந்துள்ள எல்லாவற்றிலும் மிகப் பெரிய காரியம். பிள்ளைகளுக்கு அளிக்க அவர்கள் ஏதோ பொருட்களை வைத்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன். இப்பொழுது ஆராதனையை சகோ. நெவிலிடம் மீண்டும் ஒப்படைக்கிறேன். சகோ. நெவில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாபராக.